மயிலே மயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & ஜென்சிஇளையராஜாகடவுள் அமைத்த மேடை

Mayile Mayile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ…
தளிருடல் தொடலாமோ…

ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ…
நினைவுகள் மலராதோ…

பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

—BGM—

ஆண் : தென்றல் தாலாட்ட தென்னை இருக்க…
அது தன்னை மறக்க…
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க…
அது தன்னை மறக்க…

பெண் : நீ அணைக்க நான் இருக்க…
நாள் முழுக்க தேனளக்க…

ஆண் : பனிவாய் மலரே பல நாள் நினைவே…
வரவா தரவா பெறவா நான் தொடவா…

பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஆண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…

பெண் : ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ…
நினைவுகள் மலராதோ…

ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

—BGM—

பெண் : மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க…
கெட்டி மேளம் முழங்க…
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க…
கெட்டி மேளம் முழங்க…

ஆண் : பூங்குழலில் தேனருவி தோளிரண்டும்…
நான் தழுவி…

பெண் : வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்…
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்…

ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
பெண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…

ஆண் : குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ…
தளிருடல் தொடலாமோ…

பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…


Notes : Mayile Mayile Song Lyrics in Tamil. This Song from Kadavul Amaitha Medai (1979). Song Lyrics penned by Vaali. மயிலே மயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading