என்னடி மீனாட்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Ennadi Meenakshi Song Lyrics in Tamil


ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்…
கண்ணம்மா மார்பு துடிக்குதடி…
பார்த்த இடத்தில் எல்லாம்…
உன்னைபோல் பாவை தெரியுதடி…

—BGM—

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

—BGM—

ஆண் : உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்…
அந்த மனதில் மறைந்திருக்கும் துளி விஷம்…
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்…
அந்த மனதில் மறைந்திருக்கும் துளி விஷம்…

ஆண் : நெஞ்சம் துடித்திடும் நாழி…
நீயோ அடுத்தவன் தோழி…

ஆண் : என்னை மறந்து போவதும் நியாயமோ…
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது…
காலம் செய்துவிட்ட மாயமோ…

ஆண் : ஒருமனம் உருகுது…
ஒரு மனம் விலகுது… ஹே…

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

—BGM—

ஆண் : அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை…
அந்த உறவு உனக்கொரு சிறுகதை…
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை…
அந்த உறவு உனக்கொரு சிறுகதை…

ஆண் : கண்ணன் தனிமையிலே பாட…
ராதை தன் வழியே ஓட…

ஆண் : இந்த பிரிவை தாங்குமோ என் மனம்…
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி…
நாளும் மாறுகின்ற உன் மனம்…

ஆண் : எனக்கு இன்று புரிந்தது…
எவன் என்று தெரிந்தது… ஹேய்…

—BGM—

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்…
கண்ணம்மா மார்பு துடிக்குதடி…


Notes : Ennadi Meenakshi Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. என்னடி மீனாட்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading