மனசுல சூரக்காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன் & திவ்யா ரமணிசந்தோஷ் நாராயணன்குக்கூ

Manasula Soora Kaathey Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மனசுல சூரக்காத்தே…
அடிக்குது காதல் பூத்தே…

—BGM—

பெண் : மனசுல சூரக்காத்தே…
அடிக்குது காதல் பூத்தே…

—BGM—

ஆண் : நிலவே சோறூட்டுதே…
கனவே தாலாட்டுதே…
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே…
உந்தன் வாசனை வானவில் காட்டுதே…

—BGM—

ஆண் : வாவென்று சொல்லும் முன்னே…
வருகின்ற ஞாபகம்…
கண்ணே உன் சொல்லில் கண்டேன்…
அறியாத தாய் முகம்…

பெண் : ஆஹா… ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை…
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே…

ஆண் & பெண் : பொல்லாத நெஞ்சில் வந்து…
புது ஒளி பாய்ச்சுதே…

ஆண் : கண்ணிலே இல்லையே காதலும்…
நெஞ்சமே காதலின் தாயகம்…

—BGM—

ஆண் : ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே…
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே…

பெண் : கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே…
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே…

ஆண் & பெண் : எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே…

ஆண் : மூங்கிலே ராகமாய் மாறுதே…
மூச்சிலே வான் ஒலி பாடுதே…

பெண் : மனசுல சூரக்காத்தே…
அடிக்குது காதல் பூத்தே…

ஆண் : நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே…
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே…
உந்தன் வாசனை வானவில் காட்டுதே…

—BGM—


Notes : Manasula Soora Kaathey Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. மனசுல சூரக்காத்தே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading