மணமாலையும் மஞ்சளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாவாத்தியார் வீட்டு பிள்ளை

Manamaalaiyum Manjalum Song Lyrics in Tamil


ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

—BGM—

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

ஆண் : தாழம்பூ கைகளுக்கு தங்கத்தில் செய்த காப்பு…
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு…

ஆண் : உன் அண்ணன் போட வேண்டும்…
ஊரெல்லாம் காண வேண்டும்…
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்க வேண்டும்…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே வா… ஆஅ…
செம்பவழ கொடியே வா… ஆஅ…
பிறை போல் நுதலில் அணியும் திலகம்…
நிலையாய் வாழட்டுமே…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

—BGM—

ஆண் : ஓராண்டு போனப் பின்பு…
உன் பிள்ளை ஓடி வந்து…
தாய் மாமன் தோளில் நின்று…
பொன்னூஞ்சல் ஆடும் அன்று…

ஆண் : ஏதேதோ காட்சி வந்து…
கண்ணுக்குள் ஆடுதம்மா…
ஆனந்த மின்னல் ஒன்று…
நெஞ்சுக்குள் ஓடுதம்மா…

ஆண் : குங்குமத்து சிமிழே வா… ஆ…
சங்கம் தந்த தமிழே வா… ஆஅ…
கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த…
மலரே நீ வாழ்கவே…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…


Notes : Manamaalaiyum Manjalum Song Lyrics in Tamil. This Song from Vaathiyaar Veettu Pillai (1989). Song Lyrics penned by Pulamaipithan. மணமாலையும் மஞ்சளும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading