அண்ணனவிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாவாத்தியார் வீட்டு பிள்ளை

Annana Vittu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…

ஆண் : சிந்தையில் வைத்த அண்ணன்தான்…
பந்தலில் நிக்க கூடாதா…
அண்ணனும் அங்கே வந்து நின்று…
அட்சதை போட கூடாதா…

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…

—BGM—

ஆண் : யாருக்கு என்ன தீங்கு செய்தேன்…
ஏன் இந்த சோதனை…
தங்கச்சிக்குதான் தெரியும் அண்ணனின் வேதனை…

ஆண் : சொந்தங்கள் எல்லாம் போயாச்சு…
சொப்பனம் போலே ஆயாச்சு…
பந்தங்கள் எல்லாம் என்னாச்சு…
பட்டது போதும் என்றாச்சு…

ஆண் : மங்கள வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது…
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது…
மங்கள வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது…
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது…

ஆண் : அண்ணன் இங்கே தேடுமோ…
கண்ணீரிலே ஆடுமோ…
அந்நாளிலே நான் வளர்த்த…
வண்ணக்கிளி வாடுமோ…

ஆண் : அண்ணன விட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா… ஆ…

—BGM—

ஆண் : நேசம் வச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி…
நீரை விட்டு அழிச்சாலும் நீங்குமா தலை விதி…

ஆண் : என் விதி இப்போ என்னோடு…
யாரிடம் சொல்ல என் பாடு…
கற்பனை செய்து கண்ணோடு…
கட்டியதெல்லாம் மண் வீடு…

ஆண் : ஊருக்கே பாடம் சொல்லும்…
வாத்தியார் வீட்டு பிள்ளை…
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்…
சரிவர படிக்கவில்லை…

ஆண் : ஊருக்கே பாடம் சொல்லும்…
வாத்தியார் வீட்டு பிள்ளை…
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்…
சரிவர படிக்கவில்லை…

ஆண் : நேரம் ஒன்று உண்டாகும்…
எல்லாம் அன்று நன்றாகும்…
ஒண்ணாகத்தான் நாம் இருக்க…
பின்னால் ஒரு நாள் வரும்…

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…

ஆண் : சிந்தையில் வைத்த அண்ணன்தான்…
பந்தலில் நிக்க கூடாதா…
அண்ணனும் அங்கே வந்து நின்று…
அட்சதை போட கூடாதா…

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…


Notes : Annana Vittu Song Lyrics in Tamil. This Song from Vaathiyaar Veettu Pillai (1989). Song Lyrics penned by Vaali. அண்ணனவிட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading