மலரே மௌனமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்கர்ணா

Malare Mounama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…

பெண் : மலர்கள்… பேசுமா…
பேசினால் ஓயுமா… அன்பே…

ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…

—BGM—

ஆண் : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ…
ஹான்…

பெண் : மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ… ஓ…

ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே…

பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே…

ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே…

பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே…

ஆண் : விரல்கள் தொடவா…

பெண் : விருந்தை பெறவா…

ஆண் : மார்போடு கண்கள் மூடவா…

ஆண் : மலரே… மௌனமா…

பெண் : மலர்கள்… பேசுமா…

—BGM—

பெண் : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்…

ஆண் : காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்…

பெண் : காற்றே… என்னைக் கில்லாதிரு…

ஆண் : பூவே… என்னைத் தள்ளாதிரு…

பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு…

ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு…

பெண் : உறவே… உறவே…

ஆண் : உயிரின் உயிரே…

பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே…

ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…

பெண் : மலர்கள்… பேசுமா…
பேசினால் ஓயுமா… அன்பே…

ஆண் : மலரே…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : மௌனமா…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : மௌனமே…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : வேதமா…

பெண் : ஆ… ஆ…


Notes : Malare Mounama Song lyrics in Tamil. This Song from Karnaa (1995). Song Lyrics penned by Vairamuthu. மலரே மௌனமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading