லவ் பண்ணா போதுமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஆதித்யா ஆர் கே & எம்.எம். மோனிஷாவைகுந்த் ஸ்ரீனிவாசன்லாக்கர்

Love Panna Podhume Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ போலே பார்த்தால் நியாயமா…
அட ஆசை பார்வை பார்த்தால் பாவமா…
நீயா நானா போட்டி வேண்டுமா…
அடி நீதான் நானே ஒன்றாய் ஆவோமா… ஆஹா…

ஆண் : வெயிலெனவே நானும் ஆவேனே…
வேர்வைகளாய் உன்னில் பூப்பேனே…

ஆண் : கதவிடுக்கில் புளி போலவே போலவே…
ஒரு முறைதான் என்னை பாரடி…
மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி…
ஒரு முறைதான் சில வார்த்தை பேசடி…

ஆண் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்…
உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்…
பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்…
இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே…

ஆண் : லவ் பண்ணா போதுமே…

ஆண் : நீ தீண்டும் ஒரு நேரம்…
பூ பூக்கும் தொடு வானம்…
ஏதேதோ ஏதேதோ ஆகும்…
ஏன்னேனோ என் மௌனம் இசையாகும்… ம்ம்ம்ம்…

ஆண் : காதலால் உருகி மாயும் யோகம் தருகிறாய்…
மாயமாய் திருடி பார்வை கூட்டில் அடைக்கிறாய்…
வதைக்கிறாய் அழகிய நறுமுகையே…

BGM

பெண் : நீதானே என் சிறகில் ஆடும் ஆகாயம்…
நீதானே மழை சரம்…
அருகருகே நீ பார்த்தால் இனிமையே உயிரே…
உனக்கெனவே நான் ஆனால் தனிமையே…

பெண் : இந்த காதல் போதும்… போதும்…

ஆண் : அடை மழையாய் எனில் வீழ்ந்தாயே…
பெண் : அணுவணுவாய் உன்னுள்ளில் சேர்ந்தேனே…

ஆண் : கதவிடுக்கில் புளி போலவே போலவே…
ஒரு முறைதான் என்னை பாரடி…
மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி…
ஒரு முறைதான் சில வார்த்தை பேசடி…

ஆண் & பெண் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்…
உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்…
பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்…
இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே…

ஆண் : லவ் பண்ணா போதுமே…


Notes : Love Panna Podhume Song Lyrics in Tamil. This Song from Locker (2023). Song Lyrics penned by Karthik Netha. லவ் பண்ணா போதுமே பாடல் வரிகள்.


Scroll to Top