லைலா மஜ்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சாதனா சர்கம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Laila Majnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

ஆண் : அட பிரம்மா பிரம்மா வாடா…
உன் படைப்பில் உச்சம் போடா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : சின்ன பொண்ணு உன்னை பார்த்து…
சின்ன பையன் தொலைந்தேனே…
மீன் தொட்டி மீனுக்கு எல்லாம்…
உந்தன் பேரை வைத்தேனே…

ஆண் : நீ புத்தர் வீட்டு பூவா…
இல்ல ஹில்ட்டர் வீட்டு தீயா…

பெண் : காலை நேர தேநீர் வேண்டாம்…
முத்தம் போதும் என்கின்றாய்…
அழகான பூனை போலே…
மடியின் மீது சறுகின்றாய்…

பெண் : உன் காதல் ரொம்ப தொல்லை…
நீ இம்சை பெத்த பிள்ளை…

ஆண் : நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : தேவதைகள் வரங்கள் கொடுக்கும்…
கதையை சொல்ல கேட்டேனே…
தேவதையே வரமாய் கிடைத்தால்…
சிறகை முளைத்து பறந்தானே…

ஆண் : நீ விளக்கை போல வந்தாய்…
என்னை விட்டில் ஆக்கி தின்றாய்…

பெண் : நான் ஒன்றும் அறியேன்…
உன்விதி பனிரெண்டு கட்டம்தான்…
தவணை முறையில் உன்னை கொல்ல…
பிரமன் போட்ட திட்டம்தான்…

பெண் : உன் காதல் செய்யும் மாயம்…
இது சுகமா வலிக்கும் காயம்…

ஆண் : நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…
நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…

பெண் : ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…


Notes : Laila Majnu Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Na. Muthukumar. லைலா மஜ்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading