குயிலே குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாபுலன் விசாரணை

Kuyiley Kuyiley Song Lyrics in Tamil


BGM

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…

ஆண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே…
தொட்டில் ஒன்று போட்டு வைத்தேன்…
பொட்டு வைத்து பூ முடித்து…
நாளும் உன்னை பார்த்து வைத்தேன்…

ஆண் : காலம் எல்லாம் கண்மணியே…
காவல் தரவே சேர்ந்து வந்தேன்…
பூமி எல்லாம் பூந்தமிழே…
பாட்டில் உனைத்தான் பாடி வைத்தேன்…

ஆண் : ஆயிரம் மேடைகள் ஏறி…
மாலைகள் நீ தினம் சூடு…

ஆண் : என் கண்ணே பொன்னே ஆண்ணே…
காலம் யாவும் நீயே எந்தன் கண்ணே

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…

ஆண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…

BGM

பெண் : அன்னை என்பேன் உன்னைக் கண்டு…
அன்பில் மலர் போல் பூத்து வந்தேன்…
ஏழு ஜென்மம் ஆன பின்னும்…
உந்தன் மகள் போல் நான் பிறந்தேன்…

ஆண் : பாசத்திலே மாலை கட்டி…
போடும் வரமே கேட்டியிருந்தேன்…

ஆண் : நெஞ்சமென்னும் சிறையினிலே…
நிதமும் உனை நான் பூட்டி வைத்தேன்…

ஆண் : நீயொரு தேவதை போலே…
பூமியிலே தினம் வாழ்க…

பெண் : என் கண்ணே கண்ணே கண்ணே…
ஆண் : பார்வை காட்சி யாவும் நீதான் முன்னே…

ஆண் & பெண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…

ஆண் & பெண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…


Notes : Kuyiley Kuyiley Song Lyrics in Tamil. This Song from Pulan Visaranai (1990). Song Lyrics penned by Gangai Amaran. குயிலே குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading