குறும்பா (ஃபாதர்’ஸ் லவ்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம்டி. இமான்டிக் டிக் டிக்

Kurumba (Father’s Love) Song Lyrics in Tamil


ஆண் : குறும்பா… ஆ… ஆ…

—BGM—

ஆண் : குறும்பா… ஆ… ஆ…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குறும்பா… ஆ… ஆ…

—BGM—

ஆண் : குறும்பா… ஆ… ஆ…

—BGM—

ஆண் : உயரம் குறைந்தேன் உன்னால்…
மணலில் வரைந்தேன் உன்னால்…
கடலில் கரைந்தேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : சிறகாய் விரிந்தேன் உன்னால்…
தரையில் பறந்தேன் உன்னால்…
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : ஒற்றை கிரையோன் ரெண்டாய் உடைத்து…
கிறுக்கிடுவோம்…
உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்…
நொறுக்கிடுவோம்…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா… ஆ… ஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

—BGM—

ஆண் : விண்வெளி மீன்களில் எல்லாம்…
உன் விழிதானே பார்ப்பேன்…
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்…

ஆண் : வெற்றிகள் ஆயிரம் வந்தால்…
புன்னகையோடே ஏற்பேன்…
உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்…

ஆண் : ஆட்டம் போடும் போதெல்லாம்…
உலகே அழகாய் மாறும்…
வீட்டு பாடம் செய்தாலோ…
ரத்த அழுத்தம் ஏறும்…

ஆண் : உந்தன் குறும்பு மரபணு…
எவ்வழி கொண்டாய்…
எனக்கு தெரியாதா… ஆ… ஆ…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா… ஆ… ஆ…

ஆண் : உளறல் மொழிகள் உன்னால்…
கார்ட்டூன் கனவும் உன்னால்…
கிறுக்காய் ஆனேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : எறும்போடெறும்பாய் சில நாள்…
பூனை நாயாய் சில நாள்…
மனிதன் ஆனேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : விந்தை என்று கையில் வந்தாயே…
என் மனம் குளிர…
தந்தை என்று பட்டம் தந்தாயே…
நான் தலை நிமிர…
தலை நிமிர…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உதிரம் நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் விடியல் நீதான்டா… ஆ… ஆ…

—BGM—


Notes : Kurumba (Father’s Love) Song Lyrics in Tamil. This Song from Tik Tik Tik (2018). Song Lyrics penned by Madhan Karky. குறும்பா (ஃபாதர்’ஸ் லவ்) பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading