விண்வீரா விண்வீரா இது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரஞ்சித் & ஸ்ரீ ராஸ்கோல்டி. இமான்டிக் டிக் டிக்

Vinveera Vinveera Idhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விண்வீரா விண்வீரா விண்வீரா…
இது வாழ்வின் சாவின் மைய கோடடா…
விண்வீரா விண்வீரா விண்வீரா…
அதன் மீது ஏறி ஆட்டம் போடடா…

ஆண் : விண்வீரா விண்வீரா…

ஆண் : முடியும் முடியும் சிந்தித்து பார்…
சிந்தித்த சிந்தனை நடத்தி பார்…
உன் மேல் நம்பிக்கை வைத்து பார்…

ஆண் : விண்வீரா… விண்வீரா…

ஆண் : முடியும் முடியும் சிந்தித்து பார்…
சிந்தித்த சிந்தனை நடத்தி பார்…
சாதனை படைக்க எழுந்திடு தமிழா…
தமிழா…

ஆண் : முடியாதென்றால் முடியும்…
எதையும் இதயம் அடையும்…
இருளின் மீது எட்டி உதைத்தால்…
எல்லா வானும் விடியும்…

ஆண் : எரியாதென்றால் எரியும்…
லட்சம் லட்சிய திரியும்…
கொஞ்சம் உற்று பார்த்தால் தான்…
உன் தீயின் ஆழம் புரியும்…

ஆண் : தேய்வது தேய்வது எல்லாமே…
நீ புதிதாய் மாறிடத்தானே…
வீழ்வது வீழ்வது எல்லாமே…
நீ விண்ணில் ஏறிடத்தானே…

ஆண் : விண்வீரா விண்வீரா விண்வீரா…
இது வாழ்வின் சாவின் மைய கோடடா…
விண்வீரா விண்வீரா விண்வீரா…
அதன் மீது ஏறி ஆட்டம் போடடா…

ஆண் : விண்வீரா விண்வீரா விண்வீரா…

ஆண் : விண்வீரா இன்று ஜெயிப்போம்…
முயற்சி கொண்டு…
உழைப்புக்கு பலன் நிச்சயம் உண்டு…

ஆண் : விண்வீரா விண்வீரா விண்வீரா…

ஆண் : நிறுத்தாதே போராடு விண்வீரா…
சாதனை படைக்க எழுந்திடு தமிழா …
தமிழா…

—BGM—

ஆண் : நொடியினில் ஏதும்…
மாறாதே மாறாதே போராடு…
நீ நிறுத்தாதே …
வலி என்னும் ஒன்று இல்லாமல்…
நானில்லை நீயில்லை… ஏ…
மறக்காதே…

ஆண் : பந்தாய் விழுந்து எழுந்து…
உன் நெஞ்சம் இன்று…
வானின் உயரம் அளக்குதோ…

ஆண் : நிறுத்தாதே விண்வீரா…

ஆண் : நன்றாய் உருண்டு திரண்ட…
உன் தோள்கள் இன்று…
வானின் அகலம் அளக்குதோ…

ஆண் : விண்வீரா விண்வீரா விண்வீரா…
இது வாழ்வின் சாவின் மைய கோடடா…
விண்வீரா விண்வீரா விண்வீரா…
அதன் மீது ஏறி ஆட்டம் போடடா…

ஆண் : வெற்றி அடைய எது தடுத்தாலும்…
படை எடுத்து நீ தடை உடைத்திட…
வா வா விண்வீரா…

ஆண் : முயற்சி எடுப்போம்…
சாதனை படைப்போம்…
வா வீரா… நீ வா…
விதியா சதியா போராடி வெல்லுவோம்…
வா வா விண்வீரா…
எழுந்திடு முடியும் உன்னால் முடியும்…
சாதித்திடு…

ஆண் : உலகம் உன்னை தடுக்கும்…
தடுத்து பார்க்கட்டும்…
உன்னை பார்த்தே சிரிக்கும்…
சிரிக்க சிரிக்கட்டும்…

ஆண் : உந்தன் செயல்கள் பேசும் பொழுதோ…
ஊரின் வாயை அடைக்கும்…
அடைக்கும்…

ஆண் : ஏய்… குழப்பம் எல்லாம் மறையும்…
குவிய புள்ளி தெரியும்…
யாக்கை ரெக்கை கொண்டால் தான்…
வாழ்க்கை இன்னும் விரியும்…

ஆண் : விண்வீரா விண்வீரா விண்வீரா…
இது வாழ்வின் சாவின் மைய கோடடா…
விண்வீரா விண்வீரா விண்வீரா…
அதன் மீது ஏறி ஆட்டம் போடடா…

ஆண் : ஹியர் வி கோ…
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்…
தயக்கம் வேண்டாம் மயக்கம் வேண்டாம்…
விதியை சிதைப்போம் தடைகள் உடைப்போம்…
ஒன்றாய் எழுவோம் சாதனை படைப்போம்…

ஆண் : தயக்கம் வேண்டாம் மயக்கம் வேண்டாம்…
விதியை சிதைப்போம் தடைகள் உடைப்போம்…
ஒன்றாய் எழுவோம் முன்னோக்கி செல்வோம்…
விதியை வெல்வோம் வெற்றி அடைவோம்…


Notes : Vinveera Vinveera Idhu Song Lyrics in Tamil. This Song from Tik Tik Tik (2018). Song Lyrics penned by Madhan Karky. விண்வீரா விண்வீரா இது பாடல் வரிகள்.


Scroll to Top