கோவக்காரக் கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாவேல்

Kovakkara Kiliye Song Lyrics in Tamil


ஆண் : கோவக்காரக் கிளியே…
எனைக் கொத்தி விட்டுப் போகாதே…
அருவா மனையைப் போல…
நீ புருவந்தூக்கிக் காட்டாதே… ஏ…

BGM

ஆண் : கோவக்காரக்கிளியே…
எனைக் கொத்தி விட்டுப் போகாதே…

BGM

ஆண் : அருவா மனையைப் போல…
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

ஆண் : ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே…
அட காதல் இதுதானா…

BGM

ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே…
அட காதல் இதுதானா…

ஆண் : கோவக்காரக் கிளியே…
எனைக் கொத்தி விட்டுப் போகாதே…
அருவா மனையைப் போல…
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

BGM

ஆண் : ஏ… சூரியகாந்திப் பூவப்போல…
முகத்த திருப்புறியே…
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல…
செதரி ஓடுறியே…

பெண் : ஏ… அழகா நீயும் இதமா பேசி…
ஆள உசுப்புறியே…
ஒன்கிருதா மேல மெதுவா சாய…
என்ன தொறத்துறியே…

ஆண் : மயிலாப்பூரு மயிலே…
ஒரு இறகுபோடம்மா…

பெண் : என் சொந்த ஊரு மதுரை…
அட தள்ளி நில்லையா…

ஆண் : உருகாத பொன்னுமில்ல…
உடையாத பெண்ணுமில்ல…
சரிதான் போடி புள்ள…

பெண் : மேயாத ஆடு இல்ல…
மேயாட்டி புல்லும் இல்ல…
சவடால் தேவையில்ல…

ஆண் : ஏனோ ஏனோ கொஞ்சம் வலி கூடுதே…
அட காதல் இதுதானா…

ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே…
அட காதல் இதுதானா…

ஆண் : கோவக்காரக் கிளியே…
எனைக் கொத்தி விட்டுப் போகாதே…
அருவா மனையைப் போல…
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

BGM

பெண் : சித்திரமாச வெயிலப்போல…
சூட்டக் கௌப்புறியே…
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா…
என்ன சுத்துறியே…

ஆண் : ஏய்… பத்தரமாத்துத் தங்கம் போல…
பவுசக் காட்டுறியே…
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல…
முறுக்கா இருக்கிறியே…

பெண் : ஏய்… பத்திரம் போட்டகையால்…
ஒரு பதியம் போடைய்யா…

ஆண் : பட்டா நீயும் தந்தா…
நான் பயிரே வைப்பேனே…

பெண் : பசிதாகம் தோணவில்ல…
படுத்தாலும் தூக்கமில்ல…
காதல் இதுதானா…

ஆண் : கண்ணாடி பாக்கவில்ல…
முன்னாடி நீயும்மில்ல…
காதல் இதுதானா…

பெண் : ஓ… ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே…
அட காதல் இதுதானா…

பெண் : ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே…
அட காதல் இதுதானா…

ஆண் : கோவக்காரக் கிளியே…
எனைக் கொத்தி விட்டுப் போகாதே…
அருவா மனையைப் போல…
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…


Notes : Kovakkara Kiliye Song Lyrics in Tamil. This Song from Vel (2007). Song Lyrics penned by Na. Muthukumar. கோவக்காரக் கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading