கொஞ்சி பேசிட வேணாம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.எஸ். சித்ரா & ஸ்ரீராம் பாா்த்தசாரதிநிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Konji Pesida Venaam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…

ஆண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடி…
அடி தொலைவில இருந்தாதானே…
பெருங்காதல் கூடுதடி…
தூரமே தூரமாய் போகும் நேரம்…

பெண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடா…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…

பெண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடா…
அட தொலைவில இருந்தாதானா…
பெருங்காதல் கூடுதடா…
தூரமே தூரமாய் போகும் நேரம்…

—BGM—

ஆண் : ஆச வலையிடுதா…
நெஞ்சம் அதில் விழுதா…
எழுந்திடும் போதும் அன்பே…
மீண்டும் விழுந்திடுதா…

பெண் : தனிமை உனை சுடுதா…
நினைவில் அனல் தருதா…
தலையணைப் பூக்களிலெல்லாம்…
கூந்தல் மணம் வருதா…

ஆண் : குறு குறு பார்வையால்…
கொஞ்சம் கடத்துறியே…

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும்…
நடுவுல நிறுத்துறியே…

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்…
மேகல் மழை வேணும்…
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…

பெண் : கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…

ஆண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடி…

பெண் : அடி தொலைவில இருந்தாதானே…
பெருங்காதல் கூடுதடா…

ஆண் & பெண் : தூரமே தூரமாய் போகும் நேரம்…

—BGM—

பெண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடா…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…


Notes : Konji Pesida Venaam Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthu Kumar. கொஞ்சி பேசிட வேணாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading