கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகல்யாணி & கார்த்திக்வித்யாசாகர்தம்பி வெட்டோத்தி சுந்தரம்

Kolaikara Analatchu En Muchu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கொலைகாரா… அனலாச்சு…
என் மூச்சு…
புத்தி மாறி போயாச்சு…
அட கொலைகாரா… ஆ ஹோய்…

ஆண் : கொலைகாரி…
உன்ன பாத்து உசுர் போச்சு…
நின்னு போச்சு என் மூச்சு…
அடி கொலைகாரி…

பெண் : உன் மடியில் சீராட்டு…
என் மனச தாலாட்டு…
அந்த அலைமேல் பாய் போட்டு…
என் அழகே நீராட்டு…

—BGM—

பெண் : கொலைகாரா… அனலாச்சு…
என் மூச்சு…
புத்தி மாறி போயாச்சு…
அட கொலைகாரா… ஆ ஹோய்…

—BGM—

பெண் : பாலும் சோறும் உங்காம…
பச்சை தண்ணி செல்லாம…
இத்து இத்து போனேனே…
எச்சில் முத்தம் இல்லாம…

பெண் : நெஞ்சாங்கனி தாங்காம…
ரெண்டு கண்ணும் தூங்காம…
கட்டில் சுகம் காங்காம…
காமன் செய்யும் நாட்டாமை…

ஆண் : பஞ்சில்லாம தீயில்லாம…
பத்தவச்ச கள்ளி…
புத்திக்குள்ள கத்திவீசி…
போவதென்ன தள்ளி…

ஆண் : பச்ச வாழ தோப்புக்குள்ள…
பந்தி வெக்க வாடிப்புள்ள…
பால் பழங்கள் கூடைக்குள்ள…
பத்தியமும் தேவையில்ல…
கொலைகாரி… ஏ…

—BGM—

ஆண் : நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம்…
உன்ன கண்டு வலைவீசும்…
சங்கு முத்து எல்லாமே…
தங்க கால விலைபேசும்…

ஆண் : ஓர கரை எல்லாமே…
ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்…
உன்ன மட்டும் தொட்டாலே…
மாசம் எல்லாம் பூவாசம்…

பெண் : பாதி கொலை செஞ்சுப்புட்டு…
தப்பி செல்லும் மூடா…
முத்தம் இட்டு மொத்தத்தையும்…
கொன்னுப்புட்டு போடா…

பெண் : ஆசை வச்ச பொம்பளைக்கு…
அஞ்சு நாளா தூக்கமில்லை…
மீசை வச்ச ஆம்பளைக்கு…
மெத்தை வாங்க நெனப்பில்லை…

ஆண் : கொலைகாரி…
உன்ன பாத்து உசுர் போச்சு…
நின்னு போச்சு என் மூச்சு…
அடி கொலைகாரி…

பெண் : கொலைகாரா… அனலாச்சு…
என் மூச்சு…
புத்தி மாறி போயாச்சு…
அட கொலைகாரா… ஆ…

ஆண் : உன் மடியில் சீராட்டு…
என் மனச தாலாட்டு…
அந்த அலைமேல் பாய் போட்டு…

பெண் : என் அழகே நீராட்டு…

—BGM—


Notes : Kolaikara Analatchu En Muchu Song Lyrics in Tamil. This Song from Thambi Vettothi Sundaram (2011). Song Lyrics penned by Vairamuthu. கொலைகாரா அனலாச்சு என் மூச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading