கோடி இன்பம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநெஞ்சிலாடும் பூ ஒன்று

Kodi Inbam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…

பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…

பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…

—BGM—

பெண் : இந்த சுகம் சொல்ல மொழி ஏது…
இன்ப ரசம் பொங்கி வரும் போது…
உந்தன் வசம்தானே இளமாது…

ஆண் : தேனில் ஊரும் பூச்செண்டு…
தென்றல் கொஞ்சும் நாள் கண்டு…
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ…

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…

—BGM—

ஆண் : கன்னம் என்னும் கிண்ணம் அழகாக…
கொண்டு வரும் வண்ணம் எதற்காக…
ஓவியங்கள் தீட்டும் எனக்காக…

பெண் : கண்ணில் ரெண்டு மீன் ஆட…
காதல் ஓடை நீராட…
தூங்காமல் போராட…
உந்தன் ஆசை வந்தாதோ…

—BGM—

பெண் : கங்கை நதி வந்து கடல் சேரும்…
மங்கை நதி மன்னன் மடி சேரும்…
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்…

ஆண் : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று…
நானும் சூடும் நாள் இன்று…
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ…

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…

பெண் : பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…

—BGM—


Notes : Kodi Inbam Song Lyrics in Tamil. This Song from Nenjil Aadum Poo Ondru (1978). Song Lyrics penned by Vaali. கோடி இன்பம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading