காத்து பசபசங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபுஷ்பவனம் குப்புசாமி, மலேசியா வாசுதேவன் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்எதிரும் புதிரும்

Kathu Pasanga Song Lyrics in Tamil


பெண் : உலகத்தை காப்பவளே செல்வ மகா காளி…
உன் பாதம் எங்க துணை செல்வ மகா காளி…
பொருள் தருவா புகழ் தருவா செல்வமகா காளி…
அடி பொன்னானா சாமியாடி எங்க செல்வமகா காளி…

—BGM—

ஆண் : காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…

—BGM—

ஆண் : காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…

ஆண் : மழையும் பொசபொசங்குதே…
மடை திறக்க போயிருந்தேன்…
மீனு கொசகொசங்குதே…
அடி எம்மடி மீனு கொசகொசங்குதே…

பெண் : மீனு கொசகொசங்க…
வலை எடுக்க போயிருந்தேன்…
கௌளி மொனமொனங்குதே…
அடி எம்மடி கௌளி மொனமொனங்குதே…

பெண் : கௌளி மொனமொனங்க…
கறி சோறு ஆக்க போனேன்…
சோறு தளபுலங்குதே…
அடி எம்மடி சோறு தளபுலங்குதே…

—BGM—

ஆண் : என் கண்ணான கன்னுக்குட்டி…
கால் முளைச்ச வெல்லக்கட்டி…
கண்டாங்கி வாங்கி தரேண்டி…
நீ உடுத்திக்கிட்டு சரசரக்க நடந்து வாயேன்டி…

—BGM—

ஆண் : ஹே… கண்டாங்கி சரசரக்கும்…
கட்டியதும் கசங்குமடி…
பனாரசு வாங்கித்தறேண்டி…
நீ உடுத்திகிட்டா பளபளன்னு ஜொலிக்கும் பாரடி…

—BGM—

ஆண் : ஹே… பனாரசு பளபளக்கும்…
பட்டு ஒன்ன உடம்பில் குத்தும்…
காஞ்சிபுரம் வாங்கி தாரேண்டி…
நீ உடுத்திக்கிட்டா சிலுசில்லுன்னு சிலுக்கு பாரடி…

பெண் : ஹான்… சீலை கொடுப்பதெல்லாம்…
சீலை இழக்கதானே அறிவ இந்த பொம்பள…
உங்க மூனுபேரில் ஒருத்தனையும் சிறுக்கி நம்பள…

—BGM—

ஆண் : ஹேய்ய் ஹேய்ய் ஹே இந்தா…
ஹே இந்தா அலேக்கா…
ஹே ஹே… அப்புடி போடு… அலேக்கா…
ஜமுகஜிண்ட… அப்புடிபோடு…

ஆண் : ஹே சேலம் ஆசாரிக்கு…
சீட்டு எழுதி தந்திருக்கேன்…
கால் கொலுசு வாங்கி வாரேன்டி…
நீ போட்டுகிட்டா கலகலன்னு பேசும் பாரடி…

—BGM—

ஆண் : கொலுசு கலகலக்கு கட்டிலில சத்தம் வரும்…
கல் வளையில் வாங்கதாரேண்டி…
நீ மாட்டிகிட்டா வழ வழன்னு வழுக்கும் பாரடி…

—BGM—

ஆண் : ஹேய்… கல் வளையில் வழவழக்கும்…
கஞ்சத்தனம் அதுல இருக்கும்…
வைரத்தோடு வாங்கிதாரேண்டி…
நீ போட்டுகிட்ட தகதகன்னு ஜொலிக்கும் பாரடி…

பெண் : ஆம்ம்ம்… மொத்தநகை போடுவது…
மொத்தத்தையும் வாங்கதானே…
சங்கதி தெரியும் எனக்கு…
உங்க ஆம்பளைங்க சரித்திரமே கையில் இருக்கு…

—BGM—

ஆண் : சித்திரையில் வெயில் அடிச்சா…
சித்திரமே வேர்திடுமே…
தென்னந்தோப்பு வாங்கிதாறேண்டி…
அடி எம்மாடி சிலுசிலுன்னு வச்சுருப்பேண்டி…

ஆண் : ஹேய் என்னாடா…

ஆண் : சித்திரையில் சிலுசிலுக்கும்…
மார்கழியில் குளிரடிக்கும்…
கம்பளியால் வீடு செய்வேன்டி…
நீ குடி இருக்க கதகதப்பா வச்சிருப்பேன்டி…

ஆண் : என்னடா சுதி இறங்கி போச்சு…
ஏதுடா டேய்…

ஆண் : ஹேய்… மார்கழியில் குளிர் அடிக்கும்…
கார்த்திகையில் மழை அடிக்கும்…
உனக்கு மட்டும் குடை புடிப்பேன்டி…
என் வேட்டியால குறுகுறுக்க குடை பிடிப்பேன்டி…

பெண் : குறு குறுக்கும் ஆசை வந்தா…
குறுக்குபுத்தி நூறு வரும்…
காரியத்த முடிக்க பார்பீக…
அது முடிஞ்ச பின்னே கழட்டிவிட்டு ஓடி போவீக…
ஏன்யா…

—BGM—


Notes : Kathu Pasanga Song Lyrics in Tamil. This Song from Ethirum Puthirum (1999). Song Lyrics penned by Vairamuthu. காத்து பசபசங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading