காத்திருந்த கண்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.பி.ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்மோட்டார் சுந்தரம் பிள்ளை

Kathiruntha Kangale Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…

பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா…
கதைகள் சொல்லும் பெண்ணிலா…
கண்ணிரண்டில் வெண்ணிலா…
கதைகள் சொல்லும் பெண்ணிலா…
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா…

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா…
கதைகள் சொல்லும் பெண்ணிலா…
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா…

—BGM—

பெண் : மைவிழி வாசல் திறந்ததிலே…
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன…
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே…
புன்னகை விளைந்ததென்ன…

—BGM—

பெண் : மைவிழி வாசல் திறந்ததிலே…
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன…
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே…
புன்னகை விளைந்ததென்ன…

ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே…
கொண்டு வருகின்ற வயதல்லவோ…
பொழுதொரு கனவை விழிகளிலே…
கொண்டு வருகின்ற வயதல்லவோ…

ஆண் : ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து…
தருகின்ற மனதல்லவோ… தருகின்ற மனதல்லவோ…

பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…

—BGM—

ஆண் : கைவிரலாலே தொடுவதிலே…
இந்த பூமுகம் சிவந்ததென்ன…
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்…
இந்த வையகம் இருண்டதென்ன…

பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன…
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து…
மயக்கத்தை கொடுப்பதென்ன…
மயக்கத்தை கொடுப்பதென்ன…

பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…

—BGM—


Notes : Kathiruntha Kangale Song Lyrics in Tamil. This Song from Motor Sundaram Pillai (1966). Song Lyrics penned by Vaali. காத்திருந்த கண்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading