கரிச்சான் குயிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்அஜேஷ்அஜேஷ்சர்பத்

Karichaan Kuyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கரிச்சான் குயிலே சிரிச்சா மயிலே…
கவுந்தேன் ஆள மடக்கி ஓடி அவ மாயமாகுறாளே…
வெறிச்சா வெயிலே அடிச்சா புயலே…
செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து அவ தாளம் போடுறாளே…

ஆண் : அசலா அவ எனக்காக…
கெடச்சாலே கணக்காக…
ஒறக்கம் கலைக்கும் சுகத்த அவ தானமாக கொடுத்தா…

ஆண் : நழுவாத நங்கூரம்…
நடு நெஞ்சில் வெதச்சாளே…
தனியா முழுசா அவதான் அரசாளுறா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே…
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே…
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே…
அடி ஆழம் போயி ஆற போடும்மருந்தா இனிக்குறியே அடியே…

—BGM—

ஆண் : ஹேய்… கட்டாத காளை போல…
நான் கம்பீரமாதான் போக…
என் கண்ணால மோதி என்னை நீ சாய்கிற…

ஆண் : ஹேய்… சொல்லாத ஆசை தூங்க…
நான் செல்லாத காசா ஏங்க…
தினம் உன்னோட ஓசை கேட்டு கேட்டு முழிக்கிறேன்…

ஆண் : பாலம் போட்டு நானும்தான் பரிமாற பாக்குறேன்…
வெடி போட்டு ஒடச்சாயே…
காலை மாலை தோனல கனநேரம் தூங்கல…
கலைச்சாயே கனவே…

ஆண் : திரை போட்டு நீயும் தேட தேட ஓடி ஒளியிரியே…
இரவாக நானும் ஓஞ்சு போக வெளிச்சம் கொடுக்குறியே…
கடிகார முள்ள போல என்னை வாட்டி சொழட்டுறியே…
கடிவாளம் மாட்டி பாதை காட்டி என்னை என்னை என்னை அழைக்கிற…

ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே…
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே…
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே…
அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே அடியே…

—BGM—


Notes : Karichaan Kuyile Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Muthamil. கரிச்சான் குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading