கண்ணில் அன்பை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பத்மநாபன்ஜேம்ஸ் வசந்தன்ஈசன்

Kannil Anbai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

ஆண் : சில நேரம் புன்னகையாலே…
பூக்கள் தந்திடுவாள்…
சில நேரம் சண்டைகளாலே…
என்னை வென்றிடுவாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பேசாமல் மௌனத்தினாலே…
மனதைச் சொல்லிடுவாள்…
இவள் சொந்தம் போதும் என்னும்…
எண்ணம் தந்திடுவாள்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

BGM

ஆண் : உலகம் எந்தன் உலகம் எங்கும்…
இவளே வந்திடுவாள்…
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும்…
குழந்தை என்றிடுவாள்…

ஆண் : உள்ளங்கையில் பாசம் வைத்து…
உணவைத் தந்திடுவாள்…
உறங்கும் போதும் உறங்காமல்…
என் அருகில் நின்றிடுவாள்…

ஆண் : இவள் போலே இவளைப் போலே…
வாழ்வில் நண்பர்கள் இல்லை…
மறு ஜென்மம் வந்தால் கூட…
நான் தான் இவளின் பிள்ளை…
என்றும் என்றென்றும்…
இவள் சொந்தம் வேண்டும்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

BGM

ஆண் : கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று…
கண்ணைக் கேட்கின்றேன்…
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால்…
தினமும் அழுகின்றேன்…

ஆண் : என்னை நானே காண்பது போலே…
இவளைப் பார்க்கின்றேன்…
என்றும் எங்கும் வழித் துணையாக…
இவளைக் கேட்கின்றேன்…

ஆண் : உறவென்னும் வார்த்தைக்குத்தான்…
அர்த்தம் இங்கே கண்டேன்…
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே…
இரவும் பகல்தான் என்பேன்…
என்றும் என்றென்றும்…
இவள் சொந்தம் வேண்டும்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

ஆண் : சில நேரம் புன்னகையாலே…
பூக்கள் தந்திடுவாள்…
சில நேரம் சண்டைகளாலே…
என்னை வென்றிடுவாள்…

ஆண் : பேசாமல் மௌனத்தினாலே…
மனதைச் சொல்லிடுவாள்…
இவள் சொந்தம் போதும் என்னும்…
எண்ணம் தந்திடுவாள்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…


Notes : Kannil Anbai Song Lyrics in Tamil. This Song from Easan (2010). Song Lyrics penned by Na Muthukumar. கண்ணில் அன்பை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading