பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | திப்பு, பிரவின் சாய்வி & ஸ்ரீ மதுமிதா | ஹாரிஸ் ஜெயராஜ் | இருமுகன் |
Kannai Vittu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…
என் கண்ணீரே…
என் கண்ணீரே…
வானம் விட்டு…
என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
என் கண்ணீரே…
என் கண்ணீரே…
ஆண் : மழையாய் அன்று…
பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய்…
பெண்ணே…
இசையாய் அன்று…
கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய்…
பின்னே… ஏ…
—BGM—
ஆண் : இன்னும் இன்னும்…
என்னை என்னச்…
செய்வாய் அன்பே…
உன் விழியோடு…
நான் புதைவேனோ…
காதல் இன்றி…
ஈரம் இன்றி…
போனாய் அன்பே…
உன் மனதோடு…
நான் முளைப்பேனோ…
ஆண் : செதிலாய்ச் செதிலாய்…
இதயம் உதிர…
உள்ளே உள்ளே…
நீயே…
துகளாய்த் துகளாய்…
நினைவோச் சிதற…
நெஞ்சம் எல்லாம்…
நீ கீறினாயே…
—BGM—
ஆண் : தனி உலகினில்…
உனக்கென நானும்…
ஓா் உறவென…
எனக்கென நீயும்…
அழகாய் பூத்திடும்…
என் வானமாய்…
நீயேத் தெரிந்தாயே…
ஆண் : உன் விழி இனி….
எனதெனக் கண்டேன்…
என் உயிர் இனி…
நீ எனக் கொண்டேன்…
நான் கண் இமைக்கும்…
நொடியினில் பிரிந்தாயே…
பிணமாய்த் தூங்கினேன்…
ஏன் எழுப்பி நீ…
கொன்றாய் அன்பே…
ஆண் : கனவில்…
இனித்த நீ…
ஏன் நிஜத்திலே…
கசந்தாய் பின்பே…
யார் யாரோப் போலே…
நாமும் இங்கே…
நம்முள் பூத்த…
காதல் எங்கே…
—BGM—
ஆண் : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோ போனாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : வானம் விட்டு…
என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : மழையாய் அன்று…
பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய்…
பெண்ணே…
இசையாய் அன்று…
கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய்…
பின்னேப் பின்னே…
—BGM—
குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…
—BGM—
குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…
வானம் விட்டு…
என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…
வானம் விட்டு…
என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
Notes : Kannai Vittu Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Madhan Karky. கண்ணை விட்டு பாடல் வரிகள்.