கண்ணதாசனே கண்ணதாசனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காமகொடியன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாமரிக்கொழுந்து

Kannadasane Kannadasane Song Lyrics in Tamil

—BGM—

பெண் : கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…

பெண் : எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு…
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு…

பெண் : கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…

—BGM—

ஆண் : உள்ளங்கை ரேகை எந்தன் தோகை பேரை எழுதட்டும்…
உள்ளங்கள் நாளும் நாளும் காதல் தேனில் நனையட்டும்…

பெண் : கண்ணுக்கும் ரேகை உண்டு காண வேண்டும் வா ராசா…
பொண்ணுக்குள் பூவும் உண்டு தேனும் உண்டு நான் ரோசா…

ஆண் : அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே…
பெண் : ஆத்தாடி இளமையின் ரகசியம் விளங்குது விழிகளிலே…
ஆண் : ராசாத்தி ரோசாப்பூ வளருது மலருது மயங்குது மனசு…

ஆண் : கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…

—BGM—

ஆண் : என்னென்ன கோலம் உண்டு ஜாலம் உண்டு உன் கண்ணில்…
ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா என் நெஞ்சில்…

பெண் : தித்திக்கும் பாலும் கொம்புத்தேனும் கொண்டு நான் வாரேன்…
ஒத்திகை தேவை இல்லை ஓடி வந்து நான் தாரேன்…

ஆண் : வைகாசி பொறந்ததும் உனக்கொரு மங்கள சேதி வரும்…
பெண் : கைராசி இணைந்ததும் அதுக்கொரு வெற்றியும் தேடி வரும்…
ஆண் : ஆதாரம் நீயாக தினம் ஒரு மணம் தரும் புன்னகைப்பூவே

ஆண் : கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…

ஆண் : எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு…
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு…

ஆண் : கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…

Notes : Kannadasane Kannadasane Song Lyrics in Tamil. This Song from Marikozhundhu (1991). Song Lyrics penned by Kamakodiyan. கண்ணதாசனே கண்ணதாசனே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading