கண்ணா நீ தூங்கடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிநயனா நாயர்மரகதமணிபாகுபலி 2

Kanna Nee Thoongadaa Song Lyrics in Tamil


BGM

பெண் : முறைதானா முகுந்தா…
குழு : சாிதானா சனந்தா…

பெண் : முறைதானா முகுந்தா…
குழு : சாிதானா சனந்தா…

பெண் : முறைதானா முகுந்தா…
குழு : சாிதானா சனந்தா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூவையா் மீது…
கண் மேய்வது முறையா…
பாவை என் நெஞ்சம்…
தினம் தேய்கின்ற பிறையா…

பெண் : போதுமே நீ கொஞ்சம்…
துயில் கொள்ளடா…
கண்ணா நீ தூங்கடா…

குழு : என் கண்ணா நீ தூங்கடா…

பெண் : உன் விரலினில்…
மலை சுமந்தது போதுமே…
கண்ணா நீ தூங்கடா…

குழு : என் கண்ணா நீ தூங்கடா…

பெண் : உன் இதழினில்…
குழல் இசைத்தது போதுமே…
கண்ணா நீ தூங்கடா…

குழு : என் கண்ணா நீ தூங்கடா…

பெண் : கண்ணா நீ தூங்கடா…
குழு : என் கண்ணா நீ தூங்கடா…

BGM

குழு : கோபியா் குளிக்கையிலே…
உடைகள் திருடி கலைத்தாய்…
ஓய்வெடு மாயவனே…

பெண் : பானையில் வெண்ணையினை…
தினமும் திருடி இழைத்தாய்…
தூங்கிடு தூயவனே…

குழு : சா… மனா…
பெண் : மோ… கனா…

பெண் : போதும் கண்ணா…
நீ செய்யும் திருட்டு…
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு…
மாா்பில் சாய்ந்து கண் மூடடா…

பெண் : கண்ணா நீ தூங்கடா…
குழு : என் கண்ணா நீ தூங்கடா…
பெண் : கண்ணா நீ தூங்கடா…
குழு : என் கண்ணா நீ தூங்கடா…

BGM

பெண் : சோலையின் நடுவினிலே…
நுழைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன்…
தான் உனதருகினிலே…

பெண் : கானகம் நடுவினிலே…
மயங்கி கிறங்கி கிடந்தேன்…
தான் உனதழகினிலே…

குழு : மா… தவா…
பெண் : யா… தவா…

பெண் : லீலை செய்தே என்னை நீ கவிழ்க்க…
காளை மோதி உன்னையும் கவிழ்க்க…
காயம் என்னால் கொண்டாயடா…

பெண் : கண்ணா நீ தூங்கடா…
குழு : என் கண்ணா நீ தூங்கடா…
பெண் : கண்ணா நீ தூங்கடா…
குழு : என் கண்ணா நீ தூங்கடா…

குழு : முறைதானா முகுந்தா…
சாிதானா சனந்தா…

குழு : முறைதானா முகுந்தா…
சாிதானா சனந்தா…

குழு : மாதனா மதுசூதனா…
மனோகரா மணிமோகனா…
மாதனா மதுசூதனா…
மனோகரா மணிமோகனா…

குழு : முறைதானா முகுந்தா…
சாிதானா சனந்தா…

பெண் : கண்ணா… கண்ணா…
கண்ணா… கண்ணா…

குழு : ஆனந்த அனிருதா…
ஆனந்த அனிருதா…

பெண் : கண்ணா… கண்ணா…
கண்ணா… கிருஷ்ணா…
ராதா… ரமணா… கிருஷ்ணா…
கண்ணா நீ தூங்கடா…


Notes : Kanna Nee Thoongadaa Song Lyrics in Tamil. This Song from Baahubali 2 (2017). Song Lyrics penned by Madan Karky. கண்ணா நீ தூங்கடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading