கண்களை சுற்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சத்ய பிரகாஷ் & ஷாஷா திருப்பதிசந்தோஷ் தயாநிதிகட்டப்பாவ காணோம்

Kangalai Suttrum Kanavugalai Song Lyrics in Tamil


—BGM—

குழு : கண்களை சுற்றும் கனவுகளை…
கைகளில் பிடித்திட வழி இருக்கா…
அழகின் மடியில் பிறந்து விழும்…
ஆசைகள் எழுதிட மொழி இருக்கா…

ஆண் : புதுசா இதயத்திலே…
சிறகோ முளைக்கிறதே…
இசையோ மனதினிலே…
புது புது நிறங்களை தெளிக்கிறதே…
குழு : தூறலே தூறுதே…

ஆண் : சொல் உன்னாலே மனசுக்குள் வெடித்திடும்…
சோகம் எதும் இல்லை…
இதயம் தன்னாலே இளகுது…
இது இங்கு எதும் வேஷம் இல்லை…

ஆண் : பிழையே இல்லாத தெளிந்திட கிடைத்திடும்…
நேரம் தோன்றியதே…
உறவே உன்னோடு தினம் தினம்…
அமைதியை பேசி பூக்கிறதே…

ஆண் : ஓஹோ… தேன் பூவே எந்தன் மனசுக்குள் வெடித்திடும்…
சோகம் எதும் இல்லை…
இதயம் நாள்தோறும் நின்று இளகுது…
இது இங்கு எதும் வேஷம் இல்லை…

—BGM—

பெண் : விரலோடு விரலும் இணைந்திடவே…
உன்னோடு உலவும் ஒரு சுகமே…
இது காதலோ குளிரோ என்னை மீறுதே…

பெண் : மனதோ மனதோ…
உன்னை பாக்க தேடி துடிக்கிறதே…
இளமை இலடலோ…
உன்னை தீண்ட ஏங்குதே… ஹோ…

ஆண் : கண்ணாலே பித்தம் கொண்டேனே நித்தம்…
உல்லாசம் மூடுதே… ஓஹோ…
அன்பாலே தஞ்சம் எப்போதும் மிஞ்சும்…
உன்னோடு வாழுவேன்…

குழு : கண்களை சுற்றும் கனவுகளை…
கைகளில் பிடித்திட வழி இருக்கா…
அழகின் மடியில் பிறந்து விழும்…
ஆசைகள் எழுதிட மொழி இருக்கா…

ஆண் : புதுசா இதயத்திலே…
சிறகோ முளைக்கிறதே…
இசையோ மனதினிலே…
புது புது நிறங்களை தெளிக்கிறதே…

—BGM—


Notes : Kangalai Suttrum Kanavugalai Song Lyrics in Tamil. This Song from Kattappava Kaanom (2017). Song Lyrics penned by Muthamil. கண்களை சுற்றும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading