கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Kandukonden Kadukonden Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…
விரல் தொடும் தூரத்திலே…
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து…
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி…
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்…
உயிரை உடைப்பாள் ஒருத்தி…

பெண் : என் கண் பார்த்தது…
என் கை சேருமோ…
ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா…
பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா…
ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM

பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்…
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்…

ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும்…
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்…

பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ…
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ…

ஆண் : ஏ… கனவு மங்கையே…
உனது மனது எனது மனதில் இணையுமோ…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்… ஹே ஹேய்ய்…
காதல் முகம் கண்டுகொண்டேன்… ஹே ஹேய்ய்…

ஆண் : விரல் தொடும் தூரத்திலே… ஹே ஹேய்ய்…
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

BGM

ஆண் : நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது…
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது…

பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்…
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்…

ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்…
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்…

பெண் : ஏ… காதல் தேவனே…
எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்…

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…

ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…
பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…

ஆண் : விரல் தொடும் தூரத்திலே…
பெண் : விரல் தொடும் தூரத்திலே…
ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM


Notes : Kandukonden Kadukonden Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top