கண்டேன் கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்மதுர

Kanden Kanden Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…

பெண் : இரு விழியினிலே அவன் அழகுகளை…
மிக அருகினிலே அவன் இனிமைகளை…
தின்றேன் தின்றேன்…
தெவிட்டாமல் நான் தின்றேன்…

பெண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்… கொண்டேன்…

—BGM—

ஆண் : நீ வளையல் அணியும் கரும்பு…
நான் அழகை பழகும் எறும்பு…

பெண் : ஆ… நீ தழுவும் பொழுதில் உடும்பு…
நாள் முழுதும் தொடரும் குறும்பு…

ஆண் : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு…
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு…

பெண் : பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு…
பலியாடு நானும் இல்லை தேன் கூடு…

ஆண் : ஒரு விழி எரிமலை…
மறு விழி அடை மழை…
பரவசம் உயிரோடு…

—BGM—

பெண் : மேல் இமைகள் விரதம் இருக்க…
கீழ் இமைகள் பசியில் துடிக்க…

ஆண் : ம்ம்… கால் விரலில் கலைகள் வசிக்க…
கை விரலில் கலகம் பிறக்க…

பெண் : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட…
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட…

ஆண் : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட…
கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட…

பெண் : ஜனமும் மரணமும்…
பல முறை வருமென…
தலையனை நினைவூட்ட…

ஆண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…

பெண் : கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…

ஆண் : இரு விழியினிலே அவன் அழகுகளை…

பெண் : மிக அருகினிலே அவன் இனிமைகளை…

ஆண் : தின்றேன் தின்றேன்…
தெவிட்டாமல் நான் தின்றேன்…

—BGM—


Notes : Kanden Kanden Song Lyrics in Tamil. This Song from Madhurey (2004). Song Lyrics penned by Yugabharathi. கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading