கல்யாண கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி.ஜெயச்சந்திரன் & சுவர்ணலதாஸ்ரீகாந்த் தேவாசுதேசி

Kalyana Kanavu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

—BGM—

ஆண் : கூண்டுல என்ன வச்சு…
கொஞ்சுவாய் கிளியை போல…
அம்மாடி ஆள விடு நான்…
வெட்ட வெளி மனுஷன்…

பெண் : ஆஆ… கோபுரம் மேலே நின்னு…
கூவி நான் உனக்கு சொல்வேன்…
ஆயிரம் இருக்கட்டுமே நீதான் என் புருஷன்…

ஆண் : உன்னோடு கொஞ்ச எனக்கேது நேரம்…
தாங்காது கண்ணே தலைக்கு மேல பாரம்…

பெண் : நான் பெண்ணானதே உன் தோள் சேரத்தான்…
என்ன தொட்டிலிலே விட்டுவிட்டு போகலாமா எட்டு வச்சு வா…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

—BGM—

பெண் : தாலிக்கு ஆசை வச்சு…
சாமிக்கு பொங்கல் வச்சு…
பூ போட்டு பார்த்தேன் அய்யா…
பூவு வந்ததையா யா…

—BGM—

ஆண் : சாமிக்கு லஞ்சம் தந்து…
சாதிக்கும் சுட்டி பெண்ணே…
உன்னையே படையல் வச்சு…
என்ன வலைப்பாயா…

பெண் : நீ தாலி தந்தா தாயாக இருப்பேன்…
நீ தள்ளி நின்னா தீ கூட குளிப்பேன்…

ஆண் : நீ நெனச்சபடி என்ன தந்தேனடி…
இன்னும் என்ன செய்ய நெனைக்குற…
ஓர கண்ணில் சிரிக்கிற சொல்…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…


Notes : Kalyana Kanavu Song Lyrics in Tamil. This Song from Sudesi (2006). Song Lyrics penned by Nandalala. கல்யாண கனவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading