சொல்லாதே யாரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இதயசந்திரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்சகலகலா சம்மந்தி

Sollathe Yarum Ketta Song Lyrics in Tamil


ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹேய்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…

ஆண் : மூடி வச்ச கதவுக்குள்ள…
சொர்க்கத்துக்கு வழியிருக்கு…
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா…
நூறு வழி துணையிருக்கு…
பாடம் பள்ளியறை பாடம் பாடும்…
இன்ப சுரம் பாடும்…

ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹேய் ஹேய்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…

—BGM—

ஆண் : ஊர் உலகம் ஓயத் துடிக்கிற நேரம்…
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்…
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல…
வாதாட இப்ப நேரமில்ல…

ஆண் : சூடாக ஆக்கி வச்ச சாப்பாடு…
வீணாக ஆறிப் போகக் கூடாது…
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு…
வீணாக ஆறிப் போகக் கூடாது…
எலப் போடாமலே பசிதான் தீருமா…
பசி தீராமலே குஷிதான் ஏறுமா… ஏய்…

ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹான்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…

—BGM—

ஆண் : பஞ்சு தலையணை கெஞ்சி அழைக்கிற போது…
சின்னஞ்சிறுக்கு நித்திரை என்பது ஏது…
நூலாடை மெல்ல வெளியேறட்டும்…
பூமேனி இன்பக் கதப் பேசட்டும்…

ஆண் : பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது…
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது…
பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது…
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது…

ஆண் : இரு கொடிப் போலவே உடல் விளையாடட்டும்…
அதிகாலை வரை காமன் கொடி ஏறட்டும்… ஹாஹ்ஹ்…

ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹான்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…

ஆண் : மூடி வச்ச கதவுக்குள்ள…
சொர்க்கத்துக்கு வழியிருக்கு…
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா…
நூறு வழி துணையிருக்கு…
பாடம் பள்ளியறை பாடம் பாடும்…
இன்ப சுரம் பாடும்…

ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்… ஹாஹாஹ் ஹேய் ஹாஹ்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ம்ம்ம்ம்…


Notes : Sollathe Yarum Ketta Song Lyrics in Tamil. This Song from Sakalakala Samanthi (1989). Song Lyrics penned by Idhaya Chandran. சொல்லாதே யாரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading