கை தட்டி தட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & டிம்மி ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Kai Thatti Thatti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கை தட்டி தட்டி அழைத்தாளே…
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே…
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே…
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

—BGM—

ஆண் : ரத்தினத்து தேர் ஆனாள்…
என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானாள்…
என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனாள்…

ஆண் : என் நெஞ்ச குளத்தில்…
பொன் கல்லை எறிந்தாள்…
அலை அடங்கும் முன்…
நெஞ்சத்தில் குதித்தாள்…

ஆண் : விழியால் நெஞ்சுடைத்து விட்டாள்…
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

—BGM—

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம்…
பம்பம்பம் தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம்…

—BGM—

ஆண் : பால்வண்ண நிலவெடுத்து…
பாற்கடலில் பலமுறை சலவை செய்து…
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ…

ஆண் : என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ…
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ…
அழகை தத்தெடுத்தவளோ…
என் உயிர் மலரை தத்தரித்தவளோ…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்….


Notes : Kai Thatti Thatti Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. கை தட்டி தட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading