காதல் என்பதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூர்ய பிரபாகர்ஹரிஹரன்வி. செல்வகணேஷ்குள்ளநரி கூட்டம்

Kadhal Enbadhai Song Lyrics in Tamil


ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…

ஆண் : நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது…
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது…
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ…
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள…

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…

—BGM—

ஆண் : நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்…
பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்…

ஆண் : பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்…
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்…
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்…
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்…

ஆண் : என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க… ஓ…

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…

—BGM—

ஆண் : நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்…
ஒளியின் தூரம்தான் காற்றோடு முடியும்…

ஆண் : காற்றின் தூரமோ பூமியில் முடியும்…
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்…
காற்றின் தூரமோ பூமியில் முடியும்…
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்…

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…

—BGM—


Notes : Kadhal Enbadhai Song Lyrics in Tamil. This Song from Kullanari Koottam (2011). Song Lyrics penned by Surya Prabhakar. காதல் என்பதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading