காதோடுதான் நான் பாடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிL.R. ஈஸ்வரிவி. குமார்வெள்ளி விழா

Kaathoduthaan Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…

BGM

பெண் : வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்…
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்…

பெண் : உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா…
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா…
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடு தான் நான் பேசுவேன்…
விழியோடு தான் விளையாடுவேன்…
உன் மடி மீது தான் கண் மூடுவேன்…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…

BGM

பெண் : பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது…
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது…
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது…
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது…

பெண் : எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது…
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது…
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…


Notes : Kaathoduthaan Naan Song Lyrics in Tamil. This Song from Velli Vizha (1972). Song Lyrics penned by Vaali. காதோடுதான் நான் பாடுவேன் பாடல் வரிகள்.


Scroll to Top