காத்திருந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமிஸ்டர் பாரத்

Kaathirukken Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து…
உள்ளுக்கு வாடி…
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்…
முன்னுக்கு வாடி…

—BGM—

ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி…
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி…

ஆண் : நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே…
வண்ணப் புறாவே வா…
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா…

ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து…
உள்ளுக்கு வாடி…
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்…
முன்னுக்கு வாடி…

—BGM—

பெண் : எங்கேயோ ஐஸ் ஆச்சு…
சிலு சிலுப்பாச்சு…
இங்கதான் சூடாச்சு எரியுது மூச்சு…

ஆண் : லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா…

ஆண் : என்னவோ ஆயாச்சு…
இனி என்ன பேச்சு…
பழம்தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு…

பெண் : என்ன வேணும் ராசா…
நீ கேட்டாத் தாரேன்…

ஆண் : ஒண்ணு ஒண்ணா நான்தானே…
எடுத்துக்கப் போறேன்…

பெண் : நீ கன்னத்த கிள்ள…
என்னத்தச் சொல்ல நான்…

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன்…
காதல் செய்ய கத்துத் தரனும்…
முன்னுக்கு வந்தேன்…

பெண் : நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ…
வண்ணப் புறாவோ நான்…
கை தொட்டதும் தொட்டேன்…
சம்மதப் பட்டேன் வா…

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன்…
காதல் செய்ய கத்துத் தரனும்…
முன்னுக்கு வந்தேன்…

—BGM—

பெண் : பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு…
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு…

—BGM—

ஆண் : ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு…
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு…

பெண் : மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே…
ஆண் : இப்போ இங்க ஆள் எது ரகசியம்தானே…

பெண் : நான் வெள்ளரிப் பிஞ்சு…
மெல்லவே கொஞ்சு வா…

ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து…
உள்ளுக்கு வாடி…

பெண் : காதல் செய்ய கத்துத் தரணும்…
முன்னுக்கு வந்தேன்…

—BGM—

ஆண் : உள்ளேதான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல்…
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்…

—BGM—

பெண் : என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு…
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு…

ஆண் : இன்னும் இன்னும் ஆனந்தம்…
தன்னால் புரியும்…

பெண் : சின்னப் பொண்ணு நான்தானே…
எனக்கென்னத் தெரியும்…

ஆண் : நான் உள்ளத சொல்வேன்…
சொன்னதச் செய்வேன் வா…

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன்…
காதல் செய்ய கத்துத் தரணும்…
முன்னுக்கு வந்தேன்…

ஆண் : நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே…
வண்ணப் புறாவே வா…
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா…

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்…
உள்ளுக்கு வந்தேன் ஹாஹஹா…

ஆண் : காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்…
முன்னுக்கு வாடி…


Notes : Kaathirukken Song Lyrics in Tamil. This Song from Mr. Bharath (1986). Song Lyrics penned by Vaali. காத்திருந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading