அந்தி மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாராஜ பார்வை

Andhi Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்தி மழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…
அந்தி மழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…

ஆண் : இந்திரன் தோட்டத்து முந்திரியே…
மன்மத நாட்டுக்கு மந்திரியே…

ஆண் : அந்தி மழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது…

BGM

பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது…
பாவம் என்று வந்தாள் மாது…
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்…
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்…

ஆண் : தனிமையிலே வெறுமையிலே…
எத்தனை நாளடி இளமையிலே…
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்…
இமைகளும் சுமையடி இளமையிலே…

ஆண் : அந்தி மழை பொழிகிறது…
பெண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…

BGM

ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்…

BGM

ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்…
தாகம் தீர நீ தான் மேகம்…
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது…
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது…

பெண் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு…
தாவணி விசிறிகள் வீசுகிறேன்…
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்…
சந்தனமாய் எனை பூசுகிறேன்…

பெண் : அந்தி மழை பொழிகிறது…
ஆண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…

பெண் : சிப்பியில் தப்பிய நித்திலமே…
ரகசிய ராத்திரி புத்தகமே…

பெண் : அந்தி மழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…


Notes : Andhi Mazhai Song Lyrics in Tamil. This Song from Raja Paarvai (1981). Song Lyrics penned by Vairamuthu. அந்தி மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading