காத்திரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
குகை மா புகழேந்திலட்சுமிகாந்த் எம்சித்து குமார்கண்ணை நம்பாதே

Kaathiru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தவிச்சேன் நா இளச்சேனே…
உனக்கே நான் உசுராவேன் வரியா…
துடிச்சேன் நா தொலஞ்சேனே…
எனக்காக ஒரு பார்வ தரியா…

ஆண் : என் தவிப்பு தீர பொருத்தம் கூடி வரமா நீ கிடச்ச…
என் நினப்பு பூரா நெருப்பு போல நீதான்டி கொதிச்ச…
என் உசுருக்குள்ள உசுரு இல்ல ரணமாதான் கெடந்தேன்…
உன் உருவம் பாத்த பிறவுதானே உசுரோட திரிஞ்சேன்…

ஆண் : காத்திரு அழகே…
காத்திரு அடியே…
காத்திரு அழகே…
கொஞ்சம் காத்திரு உயிரே…

—BGM—

ஆண் : வாழும் காலம் உன்னோடு…
நீயும் வேண்டும் என்னோடு…
ஆசை கொண்டேன் நாளும் வாசல் பார்த்தேனே…

ஆண் : காற்று வீசும் இப்போது…
காதல் நெஞ்சில் தப்பாது…
தெரிந்தே நகர்ந்தாய் ஏனோ…

ஆண் : நீ சொல்லாமல் என் காலம் எங்கேயும் போகாதே…
நீ இல்லாமல் என் காதல் என்றும் வாழாதே…
என் நெஞ்சோடு உன் தேடல் எப்போதும் ஓயாது…
என்னாலும் என் சுவாசம் உன்னை நீங்காது…

ஆண் : காத்திரு அழகே…
காத்திரு அடியே…
காத்திரு அழகே…
கொஞ்சம் காத்திரு உயிரே…

ஆண் : தவிச்சேன் நா இளச்சேனே…
உனக்கே நான் உசுராவேன் வரியா…

ஆண் : என் தவிப்பு தீர பொருத்தம் கூடி வரமா நீ கிடச்ச…
என் நினப்பு பூரா நெருப்பு போல நீதான்டி கொதிச்ச…
என் உசுருக்குள்ள உசுரு இல்ல ரணமாதான் கெடந்தேன்…
உன் உருவம் பாத்த பிறவுதானே உசுரோட திரிஞ்சேன்…

ஆண் : காத்திரு அழகே…
காத்திரு அடியே…
காத்திரு அழகே…
கொஞ்சம் காத்திரு உயிரே…


Notes : Kaathiru Song Lyrics in Tamil. This Song from Kannai Nambathey (2023). Song Lyrics penned by Kugai Ma Pugazhenthi. காத்திரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading