ஜோ ஜோ ஜோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாமீனாட்சி இளையராஜாஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 4

Jo Jo Song Lyrics in Tamil


பெண் : நித்தம் புது தேசம் அழைக்குதே…
தங்கமே கண் உறங்கு…
புத்தம் புது நேசம் தலைக்குதே…
வைரமே கண் உறங்கு…

பெண் : குத்தங்குறை இல்லா என் உறவே…
ரத்தினமே கண் உறங்கு…
பத்தமடை பாயில் பொன் எழிலே…
பத்திரமாய் கண் உறங்கு…

பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே…
ஜோ ஜோ ஜோ மான் விழியே…
ஜோ ஜோ ஜோ வான் மழையே…
ஜோ ஜோ ஜோ… ஜோ ஜோ ஜோ… ஜோ ஜோ ஜோ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ…
நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ…
என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ…
சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ…

பெண் : அந்த வானம் இருக்கும் வரையிலே…
உன் வேலியா நான் இருப்பேன்…
உன்ன அள்ளும் பகலும் காத்திடவே…
கருமாரியா மாறி நிப்பேன்…

BGM

பெண் : உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே…
சொர்ணமே என் சொர்ணமே…
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே…
சர்வமே என் சர்வமே…

பெண் : உன் உச்சிதனை முகர்ந்து…
உனக்கெனவே இருப்பேன்…
என் உயிர் அது போனாலும்…
உன் அருகினில் நான் கிடப்பேன்…

பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே…
ஜோ ஜோ ஜோ மான் விழியே…
ஜோ ஜோ ஜோ வான் மழையே…
ஜோ ஜோ ஜோ மை விழியே…

பெண் : ஜோ ஜோ ஜோ மான் விழியே…
ஜோ ஜோ ஜோ வான் மழையே…

பெண் : பொன் எழிலே கண் உறங்கு…
கண் உறங்கு கண் உறங்கு…


Notes : Jo Jo Song Lyrics in Tamil. This Song from Aranmanai 4 (2024). Song Lyrics penned by Ko Sesha. ஜோ ஜோ ஜோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading