இளவேனில் இது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாகாதல் ரோஜாவே

Ilavenil Idhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…
புரியாதோ இளம் பூவே உன் மோகம்…
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது…

ஆண் : பனி மூட்டம் வந்ததால்…
மலர் தோட்டம் நீங்கியே…
திசை மாறிப்போகுமோ தென்றலே…

ஆண் : காதல் ரோஜாவே…
பாதை மாறாதே…
நெஞ்சம் தாங்காது… ஓஓ…

ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…

—BGM—

ஆண் : என் மேனி நீ மீட்டும்…
பொன் வீணை என்று…
அந்நாளில் நீதான் சொன்னது…

ஆண் : கையேந்தி நான் வாங்கும்…
பொன் வீணை இன்று…
கை மாறி ஏனோ சென்றது…

ஆண் : என் போன்ற ஏழை…
முடிவிழும் வாழை…
உண்டானக் காயம் ஆறக்கூடுமா…

ஆண் : காதல் ரோஜாவே…
கனலை மூட்டாதே…
நீ கொண்ட என் நெஞ்சை…
தந்தால் வாழ்த்துவேன்…

ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…

ஆண் : பனி மூட்டம் வந்ததால்…
மலர் தோட்டம் நீங்கியே…
திசை மாறிப்போகுமோ தென்றலே…

—BGM—

ஆண் : கண்ணான கண்ணே…
உன் வாய் வார்த்தை நம்பி…
கல்யாண தீபம் ஏற்றினேன்…

ஆண் : என் தீபம் உன் கோயில்…
சேராது என்று…
தண்ணீரை நானே ஊற்றினேன்…

ஆண் : உன்னோடு வாழ…
இல்லையொரு யோகம்…
நான் செய்த பாவம்…
யாரைச் சொல்வது…

ஆண் : காதல் ரோஜாவே…
நலமாய் நீ வாழ்க…
நீ சூடும் பூமாலை…
வான் போல் வாழ்கவே…

—BGM—

பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும்…
இளங்காற்றே எங்கே போகிறாய்…
பூஞ்சோலை இது உன்னோடு வாழும்…
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்…

பெண் : பனிமூட்டம் வந்ததா…
மலர்த் தோட்டம் நீங்கியே…
திசை மாறிப் போகுமோ தென்றலே…

பெண் : காதல் ரோஜாவே…
உன்னைக் கூடாமல்…
கண்கள் தூங்காதையா…

பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும்…
இளங்காற்றே எங்கே போகிறாய்…


Notes : Ilavenil Idhu Song Lyrics in Tamil. This Song from Kadhal Rojave (2000). Song Lyrics penned by Vaali. இளவேனில் இது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading