இலக்கண கவிதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபிரதீப் குமார் & கே.எஸ். சித்ராபி. அஜனீஷ் லோக்நாத்பனாரஸ்

Ilakana Kavithai Song Lyrics in Tamil


பெண் : தரிரரோ தரரரி…
தரரி தேரரோ…
ரரிரரோ தரரிரரோ… ஓ…

—BGM—

ஆண் : இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…

குழு : நீதான் பெண்ணே…
கண்ணில் எரிகிற நிலவோ…

ஆண் : இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…

ஆண் : உனதிரு விழிகள்…
இமைத்திடும் பொழுதில்…
பகலிரவு உறைகிறதே…

குழு : இதயம் கேட்குதே…
என் காற்றாக கனவாக கை வீசும் காதல்…
இவள் யாரோ…

—BGM—

ஆண் : தேவதையின் விழியில்…
விழா காணும் பொன்வானம்…
அழைக்குது அருகில்…

பெண் : மின்னல் விரல் ஸ்பரிசம்…
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்…

ஆண் : காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு…
ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே…

குழு : அன்பே நீதான் காதல்…
வனங்களின் விதையோ…

—BGM—

பெண் : உன் அருகில் இருந்தால்…
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்…

ஆண் : உன் மடியில் இருந்தால்…
மழை மேகம் எனை வந்து மூடும்…

ஆண் : கூடும் காதல் கைகள் விலகாது என்றும்…
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா…

குழு : காதல் வாழும் வாழும்…
அழகிய நினைவு…

ஆண் : இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…

ஆண் : உனதிரு விழிகள்…
இமைத்திடும் பொழுதில்…
பகலிரவு உறைகிறதே…

—BGM—


Notes : Ilakana Kavithai Song Lyrics in Tamil. This Song from Banaras (2022). Song Lyrics penned by Palani Bharathi. இலக்கண கவிதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading