இது காதலின் சங்கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. ஜெயச்சந்திரன்எஸ். ஏ. ராஜ்குமார்அவள் வருவாளா

Idhu Kaadhalin Sangeetham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இது காதலின் சங்கீதம்…

—BGM—

ஆண் : புது குங்கும சந்தோஷம்…
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்…
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்…
ஓஓஓ… மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்…

ஆண் : இது காதலின் சங்கீதம்…

—BGM—

ஆண் : ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது…
எந்த பாதி எங்கு சேரும் யார்தான் சொல்லுவது…
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது…
வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீகிறது…

ஆண் : நிலவினை கிரகணம் தீண்டியது…
மறுபடியும் பௌர்ணமி தோன்றியது…
விதியும் புதியது கதையும் புதியது…
காலத்தின் தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு இது…

ஆண் : இது காதலின் சங்கீதம்…
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்…
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்…

ஆண் : இது காதலின் சங்கீதம்…

—BGM—

ஆண் : காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை…
ராவணன்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை…
புதியபாதை போட்டு கொள்ள எவரும் மறுப்பதில்லை…
வலிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை…

ஆண் : பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியில்லை…
பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை…
அத்தை கண்களில் அன்னை தோன்றினால்…
தோன்றிய மாகாளி அவள் பரிசுத்த பொன் தாயி…

ஆண் : இது காதலின் சங்கீதம்…

—BGM—

ஆண் : புது குங்கும சந்தோஷம்…
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்…
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்…

ஆண் : இது காதலின் சங்கீதம்…

—BGM—


Notes : Idhu Kaadhalin Sangeetham Song Lyrics in Tamil. This Song from Aval Varuvala (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. இது காதலின் சங்கீதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading