இதயம் இடம் மாறியதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்கே.எஸ். சித்ரா & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : இந்த பூமி முழுவதும் அழகாய்…
மாறி போனதேனோ…
என் வானின் மீது புதிதாய்…
ஒரு மேகம் மிதப்பதேனோ…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

ஆண் : ஓஹோ… மனமே மனமே…
எதனால் இத்தனை கொண்டாட்டம்…
கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

BGM

ஆண் : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

BGM

பெண் : ஹ்ம்ம்… அலைபாயும் காதலே அணையாத தீயா…
வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா…

பெண் : இசையோடு சேரும் தாளம்…
சுதியோடு பாடும் ராகம்…
அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே…

பெண் : உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம்…
தந்ததும் தீயா தந்ததும் தீயா…
தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா…

ஆண் : ஹ்ம்ம்… எந்தன் கனவில் பூந்தோட்டம்…
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே…
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்…
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே…

{ குழு : புது யுகமே பிறந்ததோ…
பரிமாற்றம் நிகழ்ந்ததோ…
இரு துருவம் இணைந்ததோ…
இரு விழிகள் தொலைந்ததோ… } * (2)

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…


Notes : Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. இதயம் இடம் மாறியதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading