mulumathy-avalathu-mugamaagum-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil


BGM

ஆண் : முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மின்னல்கள் அவளது விழியாகும்…
மௌனங்கள் அவளது மொழியாகும்…

ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்…
இதயம் கொடு என வரம் கேட்டேன்…
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்… ஓஹோ…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : கால்தடமே பதியாத…
கடல்தீவு அவள்தானே…
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்…

ஆண் : கேட்டதுமே மறக்காத…
மெல்லிசையும் அவள்தானே…
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்…

ஆண் : ஒரு கரையாக அவளிருக்க…
மறுகரையாக நான் இருக்க…
இடையில் தனிமை தளும்புதே நதியாய்…

ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க…
கைகள் நினைத்தால் முடிந்திடுமா…
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள்…
விரல்களை நான் பிடித்து கொண்டேன்…
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்…

ஆண் : உறக்கம் வந்தே தலைகோத…
மரத்தடியில் இளைப்பாறி…
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்…

ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம்…
தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்…
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்…

ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே…
திரையொன்று தெரிந்தது எதிரினிலே…
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM


Notes : Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na. Muthukumar. முழுமதி அவளது முகமாகும் பாடல் வரிகள்.