இச்சென்று இச்சென்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஎனக்கு நானே நீதிபதி

Ichandru Song Lyrics in Tamil


BGM

பெண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்…
இன்பத்தின் துன்பங்களே…
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க…
மின்னட்டும் வண்ணங்களே…

பெண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்…
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்…
சொர்க்கத்தை எட்டித் தொடு…

ஆண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்…
இன்பத்தின் துன்பங்களே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மை வைத்த கண்ணுக்குள்…
பொய் வைத்த பெண்ணுக்குள்…
கை வைத்து சொர்க்கத்தை யார் வைத்தது…

பெண் : பொன் வைத்த மஞ்சத்தில்…
பூ வைத்த நெஞ்சத்தில்…
கண் வைத்து நெஞ்சத்தை யார் தைத்தது…

ஆண் : தங்கச் சிலை அந்தப்புரம்…
அந்திக் கலை சொல்லித் தரும்…

பெண் : கண்ணில் கதை கற்றுத் தரும்…
இன்பச் சுவை கொட்டித் தரும்…

ஆண் : எங்கெங்கு கண் வைக்க…
எங்கெங்கு கை வைக்க…
நீ கொஞ்சம் சொல்லிக் கொடு…

பெண் : கை ரெண்டில் கை வைத்து…
கண்ணுக்குள் கண் வைத்து…
இன்பத்தை அள்ளிக் கொடு…

ஆண் : அந்தக் கணத்தில் தங்கக் குடத்தில்…
கைரேகை ஒட்டட்டும்…
கண் பார்வை சொக்கட்டும்…

ஆண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்…
இன்பத்தின் துன்பங்களே…
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க…
மின்னட்டும் வண்ணங்களே…

ஆண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்…
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்…
சொர்க்கத்தை எட்டித் தொடு…

BGM

பெண் : மோகத்தின் சொந்தத்தில் முத்தத்தின் பக்கத்தில்…
சாமத்தில் காமத்தை அர்ச்சிக்கலாம்…

ஆண் : இன்பத்தின் வெள்ளத்தில் நின்றாடும் உள்ளத்தில்…
எப்போதும் நீ என்னை ரட்சிக்கலாம்…

பெண் : அன்னக் கொடி என்னைத் தொடு…
அத்திப் பழம் எச்சிற்ப் படு…
கச்சைக் குழல் மெத்தை இடும்…
பட்டுத் துகில் சற்றே விழும்…

பெண் : உன் காதல் மங்கைக்குள் ஓடாத கங்கைக்குள்…
தேன் வெள்ளம் ஓடட்டுமே…

ஆண் : செவ்வந்திப் பொட்டாட பொன்வண்டு ஒட்டாட…
மேளங்கள் கொட்டட்டுமே…

பெண் : அந்திச் சபைக்குள் இன்பச் சிறைக்குள்…
கைதாகி வைத்துக்கொள்…
வண்டாகி மொய்த்துக் கொள்…

பெண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்…
இன்பத்தின் துன்பங்களே…

ஆண் : அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க…
மின்னட்டும் வண்ணங்களே…

பெண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்…
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்…
சொர்க்கத்தை எட்டித் தொடு…

ஆண் & பெண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்…
இன்பத்தின் துன்பங்களே…
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க…
மின்னட்டும் வண்ணங்களே…


Notes : Ichandru Song Lyrics in Tamil. This Song from Enakku Nane Needipathi (1986). Song Lyrics penned by Pulamaipithan. இச்சென்று இச்சென்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading