எத்தனை பெரிய மனிதனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எஸ்.எம்.சுப்பையா நாயுடுஆசை முகம்

Etthanai Periya Song Lyrics in Tamil


ஆண் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை…
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை…

ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…
எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…

ஆண் : எத்தனை சிறிய பறவைக்கு…
எத்தனை சிறிய பறவைக்கு…
எத்தனை பெரிய அறிவிருக்கு…

ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…

BGM

ஆண் : உயர்ந்தவர் என்ன…
தாழ்ந்தவர் என்ன…
உடல் மட்டுமே கருப்பு…
அவர் உதிரம் என்றும் சிவப்பு…

ஆண் : உயர்ந்தவர் என்ன…
தாழ்ந்தவர் என்ன…
உடல் மட்டுமே கருப்பு…
அவர் உதிரம் என்றும் சிவப்பு…

ஆண் : ஒரு வழி நடந்தார்…
உயர்ந்தவர் ஆவார்…

ஆண் : ஒரு வழி நடந்தார்…
உயர்ந்தவர் ஆவார்…
பல வழி கடந்தார்…
தாழ்ந்தவர் ஆவார்…

ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…

BGM

ஆண் : கோழியை பாரு…
காலையில் விழிக்கும்…
குருவியை பாரு…
சோம்பலை பழிக்கும்…

ஆண் : கோழியை பாரு…
காலையில் விழிக்கும்…
குருவியை பாரு…
சோம்பலை பழிக்கும்…

ஆண் : காக்கையை பாரு…
கூடி பிழைக்கும்…

ஆண் : காக்கையை பாரு…
கூடி பிழைக்கும்…
நம்மையும் பாரு…
நாடே சிரிக்கும்…

ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…

BGM

ஆண் : தனக்கொரு கொள்கை…
அதற்கொரு தலைவன்…
தனக்கொரு பாதை…
அதற்கொரு பயணம்…

ஆண் : தனக்கொரு கொள்கை…
அதற்கொரு தலைவன்…
தனக்கொரு பாதை…
அதற்கொரு பயணம்…

ஆண் : உனக்கென வேண்டும்…
உணர்ந்திடு தம்பி…

ஆண் : உனக்கென வேண்டும்…
உணர்ந்திடு தம்பி…
உழைத்ததிட வேண்டும்…
கைகளை நம்பி…

ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…
எத்தனை சிறிய பறவைக்கு…
எத்தனை பெரிய அறிவிருக்கு…

ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…


Notes : Etthanai Periya Song Lyrics in Tamil. This Song from Aasai Mugam (1965). Song Lyrics penned by Vaali. எத்தனை பெரிய மனிதனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top