எந்தன் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிருஷ்ணராஜ் & கே.எஸ். சித்ராதேவாஉன்னருகே நானிருந்தால்

Enthan Uyire Song Lyrics in Tamil


பெண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…

BGM

பெண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்…
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே…

பெண் : சொல்லாமல் என்னை எடுத்தாய்…
பதிலாக உன்னைக் கொடுத்தாய்…
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே…
உன்னருகில் நானிருந்தால்…
தினம் உன்னருகில் நானிருந்தால்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…

BGM

பெண் : என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை…
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்…
இன்று உன்னைப் பார்த்தவுடன்…
என்னைத் தோற்றுவிட்டு…
வெட்கத்தில் தலை குனிந்தேன்…

ஆண் : அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க…
என்னாலே முடியவில்லை…
இங்கு எந்தன் நாள் முழுக்க…
உன்னை நினைத்திருக்க…
ஒரு போதும் அலுக்கவில்லை…

பெண் : சின்ன சின்னக் கூத்து…
நீ செய்யிறத பார்த்து…
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்…

ஆண் : வண்ண வண்ணப் பாதம்…
நீ வச்சி வச்சி போகும்…
அந்த தரையாய் நான் இருப்பேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கவலைகள் மறக்குதே…
கவிதைகள் பிறக்குதே…
உன்னருகே நான் இருந்தால்…
தினம் உன்னருகில் நான் இருந்தால்…

ஆண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…

BGM

ஆண் : உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை…
ஆனாலும் நீ கிடைத்தாய்…
எங்கு எங்கோ சுற்றி வந்த…
என்னை நிற்க வைத்து…
அடையாளம் நீ கொடுத்தாய்…

பெண் : உன்னைச் சேரும் அந்த…
நாளை எண்ணி எண்ணி…
பத்து விரல் நான் மடிப்பேன்…

பெண் : புது மஞ்சத் தாலி மின்ன…
மெட்டி கேலி பண்ண…
பக்கத்தில் நான் கிடப்பேன்…

ஆண் : கண்ணில் மீனை வச்சி…
புத்தும் புதுத் தூண்டில்…
போட்டது நீயல்லவா…

பெண் : கள்ளத்தனம் இல்லா…
உன் வெள்ளை உள்ளம் கண்டு…
விழுந்தது நான் அல்லவா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உலகமே காலடியில்…
கரைந்ததே ஓர் நொடியில்…
உன்னருகே நான் இருந்தால்…
தினம் உன்னருகே நான் இருந்தால்…

பெண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்…
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே…

ஆண் : சொல்லால் என்னை எடுத்தாய்…
பதிலாக உன்னைக் கொடுத்தாய்…

பெண் : உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே…
ஆண் : உன்னருகே நான் இருந்தால்…
பெண் : தினம் உன்னருகே நான் இருந்தால்…

ஆண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…


Notes : Enthan Uyire Song Lyrics in Tamil. This Song from Unnaruge Naan Irundhal (1999). Song Lyrics penned by Thamarai. எந்தன் உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading