என்னுள்ளே என்னுள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவர்ணலதாஇளையராஜாவள்ளி

Ennulle Ennulle Song Lyrics in Tamil

BGM

குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…

குழு : நான் மெய் மறந்து மாற…
ஒரு வார்த்தை இல்லை கூற…
பெண் : எதுவோ மோகம்…

குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்…
ஆனாலும் அனல் பாயும்…
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்…
ஆனாலும் என்ன தாகம்…

பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன…
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன…
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்…

குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…

BGM

பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது…
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட…
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்…
ஆழ்நிலையில் அரங்கேற…

பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு…
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு…
காண்பவை யாவும் சொர்க்கமேதான்…

BGM

குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…

குழு : நான் மெய் மறந்து மாற…
ஒரு வார்த்தை இல்லை கூற…
பெண் : எதுவோ மோகம்…

குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…

Notes : Ennulle Ennulle Song Lyrics in Tamil. This Song from Valli (1993). Song Lyrics penned by Vaali. என்னுள்ளே என்னுள்ளே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading