என்னை கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதிப்பு & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ennai Konjam Song Lyrics in Tamil


ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி போகுதே…

—BGM—

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

—BGM—

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்… யே ஹே…
ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

—BGM—

ஆண் : வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு…
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை…

ஆண் : இன்று மட்டும் கொஞ்சம் நின்று…
ஒரு பூவை கிள்ளி கொண்டு…
சிரிப்புடன் செல்வேன் என்று நினைத்ததில்லை… இல்லை…

பெண் : நீ கிள்ளும் பூக்களை நான் சூடி கொள்ளவே…
என்றே எண்ணம் இன்று வந்தாச்சே…
ஆனாலும் நேரிலே எப்போதும் போலவே…
இயல்பாக பேசி போவது என்றாச்சே… ஹே…

—BGM—

பெண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

பெண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே…

ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே…
துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும்…
அள்ளி அள்ளி போகுதே…

—BGM—

ஆண் : என்னை இங்கே வர செய்தாய்…
என்னனவோ பேச செய்தாய்…
புன்னகைகள் பூக்க செய்தாய்…
இன்னும் என்ன…

ஆண் : அருகினில் அமர்ந்து என்னை…
உற்று உற்று பார்க்கும் உந்தன்…
துரு துரு பார்வைக்கும்தான்…
அர்த்தம் என்ன என்ன…

பெண் : என் பார்வை புதுசுதான்…
என் பேச்சும் புதுசுதான்…
உன்னாலே நானும் மாறி போனேனே…

பெண் : கூட்டத்தில் என்னைதான் உன் கண்கள் தேடனும்…
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே…
லா லா லா லா லா லா லா…

—BGM—

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே… ஹேஹேஹே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீயே சொல்வாயா…

பெண் : நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…


Notes : Ennai Konjam Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. என்னை கொஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading