என்னடா பொல்லாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்தப்புத்தாளங்கள்

Ennada Polladha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…

ஆண் : இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…

—BGM—

ஆண் : காடாறு மாதம் அப்பா…
நாடாறு மாதம் அப்பா…
ராஜாக்கள் கதை இதுதான்பா…
நம்ப நிலை தேவலையப்பா…

ஆண் : முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு…
இல்லை ஓடுற வரைக்கும் ஓடு…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…

—BGM—

ஆண் : படிக்க ஆச வச்சேன் முடியல…
உழைச்சும் பார்த்துபுட்டேன் விடியல…
பொழைக்க வேறு அழி தெரியல…
நடந்தேன் நான் நெனச்ச வழியிலே…

ஆண் : இதுக்கு காரணம்தான் யாரு…
படைச்ச சாமிய போய் கேளு…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…

—BGM—

ஆண் : நான் செய்யுறேன் தப்பு தண்டா…
வேற வழியேதும் உண்டா…
ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா…
ஓடிப் போய் என்னிடம் கொண்டா…

ஆண் : கெடச்சா கிடைக்கிற வரைக்கும் பாரு…
பிடிச்சா திருட்டு பட்டம் நூறு…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…

ஆண் : இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா… ஹூஹூ…


Notes : Ennada Polladha Song Lyrics in Tamil. This Song from Thappu Thalangal (1978). Song Lyrics penned by Kannadasan. என்னடா பொல்லாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading