என்னதான் நடக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபணத்தோட்டம்

Enna Than Nadakkum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

—BGM—

ஆண் : பின்னாலே தெரிவது அடிச்சுவடு…
முன்னாலே இருப்பது அவன் வீடு…
பின்னாலே தெரிவது அடிச்சுவடு…
முன்னாலே இருப்பது அவன் வீடு…

ஆண் : நடுவினிலே நீ விளையாடு…
நல்லதை நினைத்தே நீ போராடு…

—BGM—

ஆண் : நல்லதை நினைத்தே போராடு…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

—BGM—

ஆண் : உலகத்தில் திருடர்கள் சரி பாதி…
ஊமைகள் குருடர்கள் அதி பாதி…
உலகத்தில் திருடர்கள் சரி பாதி…
ஊமைகள் குருடர்கள் அதி பாதி…

ஆண் : கழகத்தில் பிறப்பதுதான் நீதி…
மனம் கலங்காதெ மதிமயங்காதே…
கலங்காதெ மதிமயங்காதே…

—BGM—

ஆண் : கலங்காதெ மதிமயங்காதே…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

—BGM—

ஆண் : மனதுக்கு மட்டும் பயந்துவிடு…
மானத்தை உடலில் கலந்துவிடு…
மனதுக்கு மட்டும் பயந்துவிடு…
மானத்தை உடலில் கலந்துவிடு…

ஆண் : இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு…
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு…
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு…

—BGM—

ஆண் : இரண்டினில் ஒன்று பார்த்துவிடு…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

—BGM—


Notes : Enna Than Nadakkum Song Lyrics in Tamil. This Song from Panathottam (1963). Song Lyrics penned by Kannadasan. என்னதான் நடக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading