மல்லியப்பூ பூத்துருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிசந்திரபோஸ்தாய்மேல் ஆணை

Malligai Poo Poothirukku Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய்… மல்லியப்பூ பூத்திருக்கு…
அது மழையில நனைஞ்சிருக்கு…
வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…
வருஷமெல்லாம் காத்துருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…

பெண் : மழை விழுந்த நேரத்துல…
என் மாராப்பும் விழுந்துருச்சு…
மாராப்பு சேலைக்குமா…
அந்த மசக்கை வந்துருச்சு…

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…

பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…

BGM

பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது…
யாரை இங்கே ஆசைவிட்டது…

ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது…
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது…

பெண் : அங்கங்கே பாராதே…
பார்த்தாலே பத்திக்கும்…

ஆண் : நான் உன்னைத் தொட்டாலே…
நாளெல்லாம் தித்திக்கும்…

பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்…

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில் நனைஞ்சுருக்கு…

பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…

BGM

பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு…
ராசா பார்த்தா அச்சம் எனக்கு…

ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு…
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு…

பெண் : மழை வந்த நேரத்தில்…
குடையாக வா மாமா…

ஆண் : குடை எல்லாம் காணாது…
உடையாக வேண்டாமா…

பெண் : போதையேறும் போதும் மாமா…

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…
வருஷமெல்லாம் காத்துருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…

பெண் : மழை விழுந்த நேரத்துல…
என் மாராப்பும் விழுந்துருச்சு…
மாராப்பு சேலைக்குமா…
அந்த மசக்கை வந்துருச்சு…

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…

பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…

BGM


Notes : Malligai Poo Poothirukku Song Lyrics in Tamil. This Song from Thaaimel Aanai (1988). Song Lyrics penned by Vairamuthu. மல்லியப்பூ பூத்துருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top