என் கண்ணுக்கொரு நிலவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிகே.பாக்யராஜ்ஆராரோ ஆரிரரோ

En Kannukoru Nilava Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா…
உன்னை படைச்சான்…
ஒன் நெஞ்சுக்கொரு உறவா…
என்னை படைச்சான்…

பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா…
என்னை படைச்சான்…
என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…

ஆண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்…
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்…
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா…
என்னை படைச்சான்…
என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…

BGM

ஆண் : உச்சி வெயில் வேளை நீ நடக்க…
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க…

பெண் : உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க…
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க…

ஆண் : முக்குளிக்க நானும் ஏங்குறேன்…
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்…

பெண் : கொஞ்சம் பொறு இரவாகட்டும்…
வெக்கமது விலகி ஓடட்டும்…

ஆண் : எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்…
பெண் : மொட்டுத்தான் விட்டுதான் பூத்திருக்கேன்…

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா…
உன்னை படைச்சான்…

பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…

ஆண் : ஹை… தன்னன்னா தானானே தந்ததனனா…
தானானேனே தந்தானா…
குழு : ஹையே ஹையே ஹையே…

ஆண் : ஹை தன்னன்னா தானானே தந்ததனனா…
தானானேனே தந்தானா…
குழு : ஹையே ஹையே ஹையே…

ஆண் : தன்ன நானே தன்னானே…
குழு : ஹையே ஹையே ஹையே…
ஆண் : தன்ன நானே தன்னானே…
குழு : ஹையே ஹையே ஹையே…

பெண் : பள்ளியறை பாட்டை நீ படிக்க…
பக்க மேளம் போல நான் இருக்க…

பெண் : தட்டுறப்ப தாளம் திறந்திருக்க…
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க…

பெண் : கொஞ்சுறப்போ தேகம் நோகுமா…
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா…

ஆண் : காயத்துக்கு களிம்பு பூசவா…
ஆறும்வரை விசிறி வீசவா…

பெண் : அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்…
ஆண் : என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்…

பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா…
என்னை படைச்சான்…

ஆண் : உன் நெஞ்சுக்கொரு உறவா…
என்னை படைச்சான்…

பெண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்…
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்…
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்…

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா…
உன்னை படைச்சான்…

பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…


Notes : En Kannukoru Nilava Song Lyrics in Tamil. This Song from Aararo Aariraro (1989). Song Lyrics penned by Vaali. என் கண்ணுக்கொரு நிலவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading