எம் மனசுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்மனோ & சுஜாதா மோகன்சிற்பிசீறிவரும் காளை

Em Manasiley Song Lyrics in Tamil


BGM

ஆண் : எம் மனசுல அடி உன்ன நெனச்சதுனாலே…
இன்று வரையில் வேற பெண்ண நெனைக்கல நானே…

பெண் : எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே…
வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே…

ஆண் : இந்த அழகு என்றும் எனக்கு…
பெண் : இந்த உசிரு என்றும் உனக்கு…

ஆண் : ஒய்… உன்னத் தவிர சொந்தம் எனக்கு…
உள்ளபடி உலகில் ஏதுமில்ல…

பெண் : எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே…
ஆண் : அஹஹா…
பெண் : வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே…

BGM

பெண் : காத்தையே கையில கிள்ளி எடுப்போம்…
நம்ம காதல பூமிக்கு சொல்லிக் கொடுப்போம்…

ஆண் : ஹேஹே… பூவுக்கு வாசத்த கத்துக் கொடுப்போம்…
வெள்ளி மேகத்த பார்வையால் கட்டி இழுப்போம்…

பெண் : உன்னச் சுத்தும் இந்த மணம்…
உன்னுடைய நந்தவனம்…

ஆண் : நந்தவனச் செடியிலே தேனெடுக்க வேணுமே…

பெண் : உன்னை எண்ணியே கையில் அள்ளினால்…
உப்புக்கல்லும் அமுதம் ஆகுமையா…

ஆண் : ஏய்… எம் மனசுல அடி உன்ன நெனச்சதனாலே…
இன்று வரையில் வேற பெண்ண நெனைக்கல மானே…

பெண் : எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே…
ஆண் : அடடா…
பெண் : வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே…

BGM

ஆண் : ஆண்டவன் தந்தது இந்த பிறப்பு…
என்னை ஆளவே வந்ததே உந்தன் வனப்பு…

பெண் : பார்த்திடும் பார்வையில் என்ன துடிப்பு…
உன்னப் பார்த்ததும் பொங்குதே நெஞ்சில் இனிப்பு…

ஆண் : ஹோ… கண்ணிருக்கும் காரணமே…
கண்ணே உன்னைப் பார்த்திடவே…

பெண் : நெஞ்சிருக்கும் காரணமே…
நித்தம் உன்னை நினைக்கவே…

ஆண் : ஓஒ… வாழும் வரைக்கும் சொந்தம் இனிக்கும்…
வாழ்க்கை ஒரு வசந்தம் ஆகுமடி…

ஆண் : எம் மனசுல அடி உன்ன நெனச்சதனாலே…
இன்று வரையில் வேற பெண்ண நெனைக்கல மானே…

பெண் : எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே…
ஆண் : அஹ…
பெண் : வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே…

ஆண் : இந்த அழகு என்றும் எனக்கு…
பெண் : இந்த உசிரு என்றும் உனக்கு…

ஆண் : ஒ… உன்ன தவிர சொந்தம் எனக்கு…
உள்ளபடி உலகில் ஏதுமில்ல…

பெண் : எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே…
ஆண் : ஆஹஹா…
பெண் : வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே…


Notes : Em Manasiley Song Lyrics in Tamil. This Song from Seeri Varum Kaalai (2001). Song Lyrics penned by Muthulingam. எம் மனசுல பாடல் வரிகள்.


Scroll to Top