எதிர்த்து நில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்யுவன் ஷங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார், டி.இமான், விஜய் ஆண்டனி, எஸ்.எஸ். தமன்யுவன் ஷங்கர் ராஜாபிரியாணி

Edhirthu Nill Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திரும்பி வா உன் திசை எது தெரிந்தது…
மாறிப் போகாதே…
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு…
கோழை ஆகாதே… ஏ…

ஆண் : உன் இள ரத்தம்…
அது நித்தம் கொதிக்கட்டும்…
எண்ணிய எண்ணம்…
அது என்றும் ஜெயிக்கட்டும்…
தப்பேதும் இல்லை…
நீ அப்பனுக்குப் பிள்ளை…

ஆண் : எதிர்த்து நில்…
எதிரியே இல்லை…
நம்பிக்கைகொள்…
தடைகளே இல்லை…

ஆண் : நிமிடம் ஏன் நொடிகளே போதும்…
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா…

ஆண் : லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ…
லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ…
லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ…
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா…

—BGM—

ஆண் : தன்னால் வருவதை ஏற்றுக்கொள்…
உன் கால் பதிவுகள் அழியாது…
வான்வெளி வரை தொட்டுச் செல்…
உன் பரம்பரை முடிவேது…

ஆண் : விழித்தவன் தூங்கக் கூடாது…
எழுந்தபின் விழுதல் ஆகாது…
வாராத பொழுது…
வருகிற பொழுது வாரிக்கொள்…

ஆண் : தாராத ஒன்றை தருகிற நேரம்…
வா பறந்து…
மண் மேல் இருந்து…
விண் போல் உயர்ந்து…

ஆண் : எதிர்த்து நில்…
எதிரியே இல்லை…
நம்பிக்கைகொள்…
தடைகளே இல்லை…

ஆண் : நிமிடம் ஏன் நொடிகளே போதும்…
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா…

—BGM—

ஆண் : ஒன்றே உறவென எண்ணிக்கொள்…
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்…
அன்பால் இணைத்தது விலகாது…
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்…

ஆண் : நினைத்ததை நடத்தி முன்னேறு…
நிலைக்கட்டும் நமது வரலாறு…
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ…

ஆண் : எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்…
ஆனந்தம்தான் ஆரம்பம்…
இது நிரந்தரம்தான்…

ஆண் : திரும்பி வா உன் திசை எது தெரிந்தது…
மாறிப் போகாதே…
வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு…
கோழை ஆகாதே…

ஆண் : உன் இள ரத்தம்…
அது நித்தம் கொதிக்கட்டும்…
எண்ணிய எண்ணம்…
அது என்றும் ஜெயிக்கட்டும்…
தப்பேதும் இல்லை…
நீ அப்பனுக்குப் பிள்ளை…

ஆண் : எதிர்த்து நில்…
எதிரியே இல்லை…
நம்பிக்கைகொள்…
தடைகளே இல்லை…

ஆண் : நிமிடம் ஏன் நொடிகளே போதும்…
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா…

ஆண் : லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ…
லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ…
லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ…
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா…


Notes : Edhirthu Nill Song Lyrics in Tamil. This Song from Biriyani (2013). Song Lyrics penned by Gangai Amaran. எதிர்த்து நில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading